தற்போது, சமந்தா விரைவில் ரிலீசாகவுள்ள தனது அடுத்த படமான ‘ஓ பேபி’-க்கான புரமோஷனில் தீவிரமாக இருக்கிறார். இதற்கிடையில், காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருக்கும் கணவர் நாக சைதன்யாவை சந்திக்க, காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு, ஷூட்டிங்குக்கு இடையே கிடைத்த சிறிய விடுமுறையில், தம்பதி தங்களுக்கான நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவழித்தனர். மாமனார் நாகர்ஜுனாவும் இந்த விடுமுறையில் இணைந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மீண்டும் ‘ஓ பேபி’ புரமோஷனுக்காக சமந்தா ஹைதராபாத் திரும்பி இருக்கிறார். ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய சமந்தாவின் கேஷுவல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மக்களோடு மக்களாக, தனது செல் ஃபோனை நோண்டிக் கொண்டே, சமந்தா கியூவில் நின்றிருந்த புகைப்படங்கள் சம்மு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Airport Diaries: Samantha Akkineni keeps it casual as she returns after meeting Naga Chaitanya – https://t.co/Mk4wQ77m7D #SamanthaAkkineni @Samanthaprabhu2 #NagaChaitanya
— pinkvilla (@pinkvilla) 13 June 2019
பிளேசர் Jacket, ஜீன்ஸ், போனிடெய்ல் ஹேர் ஸ்டைல் என சமந்தா சிம்பிள் Pretty கேர்ளாக தோற்றமளிக்கு இந்த புகைப்படங்கள் வழக்கம் போல் செம வைரல்.