/tamil-ie/media/media_files/uploads/2021/04/samantah-gifted-car.jpg)
தனது 7 சகோதரிகளை ஆட்டோ ஓட்டி காப்பாற்றி வரும் பெண்ணின் வறுமையை நிலையை அறிந்து அவருகு உதவும் விதமாக நடிகை சமந்தா புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா, தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு சினிமா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு வசித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தீல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவ வருகிறார். மேலும், அவர் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
அண்மையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்த சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கவிதா என்ற பெண் கலந்துகொண்டார். கவிதா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர். அது மட்டுமில்லாமல், தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் தனது 7 சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு ஏற்பட்டது. 7 சகோதாரிகளையும் ஆட்டோ ஓட்டி காப்பாற்றி வருவதாக தெரிவித்தார்.
கவிதாவின் வறுமை போராட்டத்தையும் சோகக் கதையையும் கேட்டு வருத்தப்பட்ட நடிகை சமந்தா அவருக்கு உதவ நினைத்தார். கவிதா கார் டிராவல்ஸ் ஆரம்பித்து இன்னும் உயர கார் ஒன்றை பரிசாக அளிப்பதாக அந்த நிகழ்ச்சியிலேயே கவிதாவுக்கு உறுதியளித்தார். நடிகை சமந்தா நிகழ்ச்சியில் வாக்குறுதி அளித்தபடி, கவிதாவுக்கு தற்போது 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.
தனது 7 சகோதரிகளைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டி வறுமையுடன் வாழ்க்கையில் போராடி வரும் கவிதாவுக்கு உதவி செய்வதாக தான் கூறியபடி, கார் வாங்கி பரிசளித்த நடிகை சமந்தாவை ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு முன்னணி சினிமா நடிகையாக இது போன்ற உதவிகளை செய்வதற்கு பெரிய மனசு வேண்டும் என்று சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.