நடிகை சமந்தா, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தனது ரசிகர்களுடன் சமூகவலைதளங்களில் எப்போதும் தொடர்பில் உள்ளார். இதன்காரணமாக, மற்ற நட்சத்திரங்களின் ரசிகர்களும், சமந்தாவை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் போட்டோக்கள், வீடியோக்களை, சமந்தா அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உண்டு. சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோக்களை, பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, யாரும் பார்க்காத ஒர்க் அவுட் வீடியோ என்று தலைப்பு இட்டு, சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுடன் அவர் கருத்தும் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தான் ஒருபோதும் தயங்கியதில்லை. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும்போது, நமக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள் வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவுக்கும், அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.