Advertisment

கோலிவுட்டின் நியூ பெஸ்டிஸ் இவங்கதான்! செம வைரலாகும் சமந்தா.. நயன்தாரா ஃப்ரென்ட்ஷிப் போட்டோ!

விக்னேஷ் சிவனின் ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

author-image
WebDesk
Feb 23, 2022 10:53 IST
Samantha Nayanthara

Samantha latest instagram photo with nayanthara goes viral on social media

நடிகை சமந்தா’  ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் சமந்தா வெஸ்டர்ன் பாணி டிரெஸ்ஸில் ஸ்டைலாக இருந்தாலும், நயன்தாரா சிம்பிளான சல்வார் கமீஸ் செட்-உடன் பார்க்க எளிமையாகவும், அழகாகவும் இருக்கிறார். இந்த படத்தை இதுவரை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

Advertisment

இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சமந்தா, அதில்’

20:02

On 22.2.2022

ஸ்பெஷல்.  எங்கள் ஸ்பெஷல் நட்பு #நயன்தாரா என எழுதியிருந்தார். நயன்தாரா எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை, ஆனாலும் சமந்தா அதன் வழியாக தனது அன்பை நயன்தாராவுக்கு பகிர்ந்தார்.

விக்னேஷ் சிவனின் ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

முன்னதாக’ சமந்தா தனது பிரம்மாண்டமான படமான சகுந்தலத்தின் முதல் தோற்றத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். படத்தில் சமந்தா’ சகுந்தலாவாக நடிக்கிறார்.

இப்படம் பற்றி சமந்தா கூறுகையில், இளவரசியாக நடிக்க வேண்டும் என்ற கனவு எனக்கு எப்போதும் உண்டு. “திரையுலகில் வந்து 10 வருடங்கள் ஆன நிலையில், என்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சகுந்தலம் வெளியீட்டு விழாவில் சமந்தா கூறியிருந்தார்.

சகுந்தலம், ஒரு பான்-இந்திய திரைப்படம், குணசேகர் இயக்கி எழுதியுள்ளார். குணசேகரின் மகள் நீலிமா குணா தயாரிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Nayanthara #Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment