New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/27/juNdXxWd81lSlUlxsVSC.jpg)
காமெடி கலந்த த்ரில்லர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சமந்தா - வைரலாகும் 'சுபம்' டிரெய்லர்!
சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சுபம் படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காமெடி கலந்த த்ரில்லர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சமந்தா - வைரலாகும் 'சுபம்' டிரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான "சிட்டாடல்" என்ற இணைய தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இதுவரை நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அதன்படி, சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் கீழ் "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர். இப்படம் மே 9-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுபம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில், சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சினிமா பண்டி படத்தை இயக்கிய பிரவீன் கண்ட்ரேகு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம், காதல், இளமை, நட்பு என ஒரு ஜாலியான பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா புதிய பயணத்தை தொடங்கியுள்ளதால் இப்படத்திற்கு சுபம் என பெயரிட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ஹர்ஷித் மல்கிரெட்டி, சரண் பெர்ரி, ஸ்ரேயா கோந்தம்,ஷாலினி கொடேபுடி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.