சமந்தா - நாக சைதன்யா ஜோடி தெலுங்கின் ரியல் ஹாட் ஜோடிகளில் நம்பர்.1 எனலாம். தமிழ்ப் பெண்ணான சமந்தா, ஆந்திராவின் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இரு மொழித் திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே, சமந்தா காதலில் விழுந்தார். நாக சைதன்யாவுடன் அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆகவில்லை என்றாலும், இருவரது மனங்களில் காதல் ஹிட் அடித்தது.
இருவரது காதல் விவகாரம் நாகர்ஜுனா வீட்டிற்கு தெரிந்த போது, முதலில் சில மறுப்புகள் இருந்தாலும், பிறகு ஏற்றுக் கொண்டனர். இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன், கோவாவில், கடந்த 2017ம் ஆண்டு அக்.7ம் தேதி இருவரின் திருமணமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்று தங்களின் இரண்டாவது திருமண ஆண்டை, சம்மு - நாகு ஜோடி சூப்பராக கொண்டாடி வருகிறது.
இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாவில் காதல் கணவருக்கு அன்பு வாழ்த்துகளை பரிமாறியுள்ளார். அதில், "இன்னும் வலிமையாகிறோம். இரண்டு ஆண்டு திருமணம், பத்து ஆண்டு கதை. உன்னில் சிக்கிக் கொண்டேன்" என்று காதலுருக பதிவிட்டுள்ளார்.
data-instgrm-version="12">
சமந்தாவின் இந்த பதிவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/a148-300x192.jpg)
நடிகைகள் காஜல் அகர்வால், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் காதல் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
data-instgrm-version="12">
ராணா தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.