/tamil-ie/media/media_files/uploads/2019/09/sam-1.jpg)
samantha, naga chaitanya, marriage, best friend, wife, oh baby, சமந்தா, நாக சைதன்யா, திருமணம், சிறந்த நண்பர், மனைவி, மகிழ்ச்சி, ஓ பேபி
இளம் காதல் ஜோடிகளாக வலம் வந்து தெலுங்கு திரையுலகை மட்டுமல்லாது இந்திய திரையுலகையே ஆச்சரியப்பட வைத்துக்கொண்டிருப்பவர்கள் நாகசைதன்யா - சமந்தா ஜோடி.
சமந்தா தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், லட்சுமி மஞ்சு நடத்தும் நேர்காணல் நிகழ்ச்சியில், சமந்தா பங்கேற்றார். அங்கு சில குதர்க்கமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சாதுர்யமாக பதிலளித்து பார்வையாளர்களை சமந்தா பரவசப்படுத்தினார்.
நாக சைதன்யாவின் முதல் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்துள்ளதாக சமந்தா குறிப்பிட்டார். இந்த பதிலைக்கேட்டு அரங்கமே அமைதியானது. பின் மெதுவாக சமந்தா கூறியதாவது, நாக சைதன்யாவின் முதல் மனைவி, அவரது படுக்கையறையில் உள்ள தலையணை தான். ஏனெனில், அவர் தலையணையை முத்தமிடும்போது, அதுவும் அவருக்கு முத்தமிடும் என்று கூறினார்.
அந்நிய நபர்களைவிட, சிறந்த நண்பரை திருமணம் செய்துகொள்வதன் மூலம், சிறந்த மற்றும் இனிமையான வாழ்க்கை அமையும் என்று நாக சைதன்யா கூறியுள்ளார். நண்பரை திருமணம் செய்துகொள்வதன் மூலம், நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம், நமது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். இதன்காரணமாக வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும். நாமும் மனமகிழ்ச்சியுடன் நாம் செய்யும் தொழிலை திறம்பட செய்யலாம். எனக்கு சமந்தா மிகச்சிறந்த நண்பர். இருவரும் 8 ஆண்டுகளுக்குமேலாக நட்புறவில் இருந்தோம். தற்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளோம். எங்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருப்பதாக நாக சைதன்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.