Oh Baby Teaser: திருமணத்திற்குப் பிறகும் அதிக படங்களில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.
Advertisment
தமிழ், தெலுங்கில் வந்து போகும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சாம்.
இந்நிலையில் தென் கொரிய படமான ‘மிஸ் கிரானி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதனை இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி இதனை இயக்கியிருக்கிறார்.
Advertisment
Advertisements
இதில் இளம் வயது முதல் வயதாகும் வரை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள் தான் களம். இதில் இளம் பெண்ணாக சமந்தாவும், முதிய தோற்றத்தில் லட்சுமியும் நடிக்கிறார்கள்.
தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி யூ-ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது இந்த ‘ஓ பேபி’ டீசர்!