scorecardresearch

600 படிகளில் சூடம் ஏற்றி வழிபட்ட சமந்தா? இதுதான் காரணம்

நடிகை சமந்தா உடல் நலம் குணமாக 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். இதற்காக பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

600 படிகளில் சூடம் ஏற்றி வழிபட்ட சமந்தா? இதுதான் காரணம்

நடிகை சமந்தா உடல் நலம் குணமாக 600 படிகள்  சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். இதற்காக பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

நடிகை சமந்தா நடிப்பில வெளியான யசோதா  படத்திற்காக தமிழ் மற்றும் தெலுங்கில் பேட்டி கொடுத்தார். சமீபத்தில்தான் சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ”சில நாட்கள் என்னால் எழுந்துகொள்ளவே சிரமாக இருக்கும்” என்று பேட்டி ஒன்றில் கண்ணீர் வழிய பதிலளித்தார்.

யசோத படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் சமந்தா. அப்போது அவர் பழைய அழகில் இல்லை என்று வெளியான மீஸ்-க்கு பதிலளிக்கும் வகையில், என்னைபோல் இல்லாமல் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்று பதில் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு விரைவாக நோய் குணமாக வேண்டும், என்பதற்காக பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.  600 படிகளிலும் நடந்தே சென்று சூடம் ஏற்றி வழிபட்டார். 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Samantha on palani mugar kovil climbing six hindered steps