என்னைப்போல பல மாதங்கள் சிகிச்சை மருத்துகள் என உங்களுக்கு நேராமலிருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று சமந்தா ட்வீட் செய்துள்ளார் .
சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குணசேகர் இயக்கியுள்ளார். மேலும் மணிசர்மா இசையமித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது சமந்தா அழுதது, அவரது ரசிகர்களை பாதித்தது. பிப்ரவரி 17ம் தேதியன்று 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சமந்தா “ எத்தனை போராட்டங்கள் சந்தித்தாலும் ஒன்றும் மட்டும் மாறாது. நான் சினிமாவை நேசிக்கிறேன். பதிலுக்கு சினிமாவும் என்னை நேசிக்கிறது. நினைத்தபடி இந்த படம் வெளியாக வேண்டும். பல கடினமான தருணத்தை சந்தித்தாலும், சினிமா மீதான காதல் மட்டும் இழக்கவில்லை . என்னை இந்த காதாபாத்திற்காக தேர்வு செய்த குணசேகர் சார்-க்கு நன்றி. “ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சமந்தா தனது அழகை இழந்துவிட்டதாக ஒரு மீம்ஸ் புகைப்படம் வெளியானது. இதை பகிர்ந்த சமந்தா, என்னை போன்று பல மாதங்கள் சிகிச்சை மருத்துகள் என உங்களுக்கு நேராமலிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் வைராகி வருகிறது.