கடந்த காலங்களில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளையில் கணிசமான நேரத்தை செலவிட்ட சமந்தா ரூத் பிரபு, புதன்கிழமை இரவு தனது சமூக ஊடகப் பக்கத்தில், கோயம்புத்தூரில் உள்ள அறக்கட்டளையில் இருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சமந்தா பகிர்ந்துள்ள படத்தில் சில காளைகள் மைதானத்தில் ஓய்வெடுப்பதைக் காட்டுகிறது மற்றும் இதனுடன் பகிரப்பட்ட தலைப்பு, “வீட்டுக்கு வெளியே இருக்கும் வீடு” அதாவது தனது மற்றொரு வீடு என்று பதிவிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Samantha Ruth Prabhu calls Sadhguru’s Isha Foundation her ‘home away from home’ after reports of police action
நாக சைதன்யா உடனான விவாகரத்து குறித்த கொண்டா சுரேகாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சமந்தா தனது அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட சில மணிநேரங்களில் இந்த பதிவு வந்துள்ளது. பிரபல தம்பதியினரின் விவாகரத்துக்கு கே.டி. ராமராவ் தான் காரணம் என்று கொண்டா சுரேகா முன்பு மறைமுகமாகக் கூறியிருந்தார். பின்னர், அவர் தனது அறிக்கையை வாபஸ் பெற்றார். சமந்தா தனது குறிப்பில், கொண்டா சுரேகாவிடம் தனது தனிப்பட்ட போராட்டங்களை அற்பமானதாக கருத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
“தனிநபர்களின் அந்தரங்கம் குறித்து நீங்கள் பொறுப்பாகவும் மரியாதையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விஷயங்களைத் தனிப்பட்டதாக வைத்திருப்பதற்கான எங்கள் விருப்பம் தவறான விளக்கத்தை ஏற்காது. தெளிவுபடுத்துவதற்காக: எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கத்துடனும் நடந்தது, இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வைக்க முடியுமா? நான் எப்போதுமே அரசியல் சாராதவனாகவே இருந்து வருகிறேன், அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்” என்று அவர் எழுதினார்.
அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா, அவரது தந்தை நாகார்ஜுனா அக்கினேனி, சகோதரர் அகில் அக்கினேனி ஆகியோரும் கொண்டா சுரேகாவுக்கு எதிராகப் பேசினர்.
இதற்கிடையில், தொண்டாமுத்தூரில் உள்ள ஈஷா அறக்கட்டளையின் ஆசிரமத்தில் விசாரணை நடத்துவதற்காக 150 போலீஸார் செவ்வாய்கிழமையன்று சத்குருவின் ஈஷா அறக்கட்டளைக்குள் நுழைந்தனர். அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்ட ஒரு நாள் கழித்து இது நடந்தது. இது பொதுவான விசாரணைக்காக என்று ஈஷா அறக்கட்டளை கூறியது, “அவர்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரித்து வருகின்றனர், வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்கிறார்கள், அவர்கள் எப்படி வந்து தங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்” என்று கூறியது. உச்சநீதிமன்றம் காவல்துறையின் நடவடிக்கைக்கு வியாழக்கிழமை தடை விதித்தது. மேலும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.