பிரபல ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜகி வாசுதேவ் உடன் நடிகை சமந்தா உரையாடிய நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி உள்ளது. சமந்தா சத்குருவிடம் ஆன்மீகம், ஈகோ மற்றும் தனித்துவம் பற்றிய யோசனைகளை கேட்டார்.
தன்னைச் சுற்றி ஈகோ சூழ்ந்துள்ளதாகவும், சினிமா துறையில் ஈகோ உச்சத்தில் இருப்பதாகவும் சமந்தா ரூத் பிரபு கூறியுள்ளார். சத்குரு ஜகி வாசுதேவின் மண்ணைக் காப்போம் பயணத்தின்போது, ஹைதராபாத்தில் நடிகர் சமந்தா சத்குருவுடன் உரையானார். அப்போது, சமந்தா அவரிடம் தொடர்ச்சியாக கேள்விகளைக் கேட்டார்.
இந்த உரையாடலின்போது, சமந்தா, ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள், ஆன்மீகப் பாதையில் செல்லாதவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கருதும் ‘ஆன்மீக ஈகோ’ பரவுவதைக் கவனித்ததாகக் கூறினார். சத்குரு நடிகரிடம், “யார் இந்த ஈகோ பையன், உன் நண்பனா?” என்று நகைச்சுவையாகக் கேட்டார். அதற்கு சமந்தா சிரித்துக்கொண்டே, “என்னைச் சுற்றி ஈகோ இருக்கிறது. அது என்னுடைய சினிமா துறையில் உச்சத்தில் இருக்கிறது” என்று கூறினார்.
சத்குரு ஜகி வாசுதேவ், சமந்தாவின் கேள்வியைக் கேட்டு, பின்னர், சமந்தாவிடம் “முதலில், இந்த ஈகோ பையனைப் பற்றி பேசுவோம். அது எங்கே இருக்கிறது என்று காட்டினால், இப்போதே சரி செய்து விடுகிறேன்.” என்றார். அதற்கு சமந்தா, “அது எங்கிருந்தது என்பதை நான் அறிந்திருக்க விரும்புகிறேன். அது திடீரென்று வந்துகொண்டே இருக்கும்!” என்று கூறினார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்கும் நடிகரின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, சத்குரு, சில தருணங்களில் மக்கள் "மோசமாக" இருக்க முடியும். ஆனால், ஒருவர் எப்போதும் "ஈகோ" மீது அந்த நடத்தையை குற்றம் சாட்டிவிட்டு நகர்கிறார் என்று கூறினார்.
“சில நேரங்களில் நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள், சில தருணங்களில் நீங்கள் மோசமானவராக இருப்பதற்கு சாத்தியம் உள்ளது. எனவே, நீங்கள் மோசமாக இருக்கும்போதெல்லாம், 'இது என் ஈகோ' என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஏன், 'இது நான்தான். நான் சில சமயம் அற்புதம், சில சமயம் மோசம்’ இப்படிப் பார்த்தால் இயல்பாகவே மோசமானது குறையும்.
ஆனால், நீங்கள் மோசமாக இருக்கும் போதெல்லாம், ‘மிஸ்டர் ஈகோ இதைச் செய்கிறது’ என்று நீங்கள் சொன்னால், அது எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. எனவே இந்த பையனை எப்படி சரிசெய்வது? எனவே, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் அது நடக்கிறது. ஏனெனில் இது ஆன்மீகம் இல்லாமல் ஆன்மீக வாசகங்கள்” என்று ” என்று சத்குரு ஜகி வாசுதேவ் கூறினார்.
சினிமாவில், சமந்தா சமீபத்தில் தமிழ் ரோமாண்டிக் காமெடி படமான காத்துவாகுல ரெண்டு காதல் படத்தில், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் இணைந்து நடித்தார். விஜய் தேவரகொண்டா உடன் புராண படமான சாகுந்தலம், அறிவியல் புனைகதை திரில்லர் படமான யசோதா மற்றும் குஷி போன்ற திரைப்படங்களுடன் சமந்தா பிஸியாக உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”