/tamil-ie/media/media_files/uploads/2021/10/samantha-1200-4.jpg)
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில், அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஜிம்மில் ஜாலியாக விளையாடிய ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். நடிகர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, சமந்தா வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா தனது நண்பர்கள் குடும்பத்தினருடன் ஜிம்மில், கயிறு இழுத்தல் போட்டியில் விளையாடுகிறார். அப்போது வெற்றிக்காக சமந்தா தரை உருண்டு போராடுகிறார். இந்த ஜாலி வீடியோவை முதலில் ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டி வெளியிட்டார்.
சமந்தா அந்த வீடியோவுடன், "சுய குறிப்பு – கிரேசியான, கடுமையான போட்டி கொடுக்க கூடிய குடும்பத்துடன் மோதாதீர்கள், நீங்கள் காயப்படுவீர்கள். நீங்கள் வலியை உணர்வீர்கள்” என பதிவிட்டுள்ளார் இதற்கு நடிகை சம்யுக்தா ஹெக்டே, ”இது மிகவும் வேடிக்கையாகவும் அடிமையாகவும் இருக்கும்” என கமெண்ட் செய்துள்ளார்.
ஷில்பா ரெட்டி, சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
இந்த மாத தொடக்கத்தில், சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். இருவரும் திருமணமான நான்கு வருடங்களுக்குப் பிறகு கணவன் –மனைவி உறவிலிருந்து பிரிந்து செல்வதாகக் கூறி, ஒரே மாதிரியான அறிக்கைகளை தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.
"எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். மிகவும் ஆலோசித்த பிறகு நானும் நாக சைதன்யாவும் கணவன் மனைவி உறவிலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தோம். ஒரு தசாப்தத்திற்கும் மேலான நட்பைப் பெறுவதில் நாங்கள் அதிர்ஷ்டசாலி, இது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது, இது எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்கள் ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி, ”என்று அவர்கள் அந்த அறிக்கையில் கூறியிருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.