நடிகை சமந்தா – நாக சைதன்யா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக திரையில் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
நிஜ வாழ்க்கையில் இணைந்த இந்த ஜோடி, விரைவில் திரையில் ஜொலிக்க இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்ற இவர்களது திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்திருந்தார்.
தற்போது விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’, விஜய்சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் சமந்தா பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் ஷிவ நிர்வனா இயக்கத்தில் நடிகை சம்ந்தா – நாக சைதன்யா விரைவில் இணைந்து நடிக்கவுள்ளனர். திருமணத்திற்கு முன்னர் ஏற்கனவே இருவரும் நான்கு படங்களில் நடித்திருந்தனர்.
???????????? #rollinginglory .. Excited !! Excited!! Excited!! https://t.co/pleFvX2Egg
— Samantha Akkineni (@Samanthaprabhu2) March 8, 2018
2014ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படமாகும். இந்நிலையில், மீண்டும் இவர்களது நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to announce my next directed by shiva produced by @Shine_Screens and will be sharing screen space (if she gives me any 😉 )with my better half @Samanthaprabhu2 ..feels good to be back to being able to take you through another journey of love pic.twitter.com/EePspkMlPQ
— chaitanya akkineni (@chay_akkineni) March 8, 2018