U-Turn Review: யூ டர்ன் படம் எப்படி? இறுதி வரை ரசிகர்களை பதற்றத்தில் வைத்திருக்கும் பேய்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
U-Turn Review

U-Turn Review

U-Turn Review : சமந்தா நடிப்பில் பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள யூ டர்ன் படம் இன்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள்?

U-Turn Review : யூ டர்ன் ! ↩ படத்தின் கதை :

Advertisment

ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி சிலர் யூ டர்ன் எடுக்கிறார்கள். அப்போது ஒரு நாள் ஒருவர் மேம்பாலத்தில் இருக்கும் கல்லை நகர்த்தி வைத்து யூ டர்ன் எடுக்கிறார். பின்னர் அந்த கல்லை அதே இடத்தில் எடுத்து வைக்காமல் அவசரத்தில் சென்றுவிடுகிறார்.

இதன் காரணமாக ஒரு தாய் மகள் இறந்து போகிறார்கள். இதுபோல் இந்த மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகளை பற்றி செய்தி சேகரிக்க செல்கிறார் பத்திரிக்கையாளர் சமந்தா. இந்த மரணத்திற்கு பிறகு ஏற்படும் விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றது.

அந்த தாய் - மகள் மரணத்திற்கு பிறகு பல கொலைகளும் நடக்கிறது. இறுதியில் அதே பயம் சமந்தாவையும் துரத்துகிறது. இந்த சூழலில் இருந்து தப்பிக்க போராடுகிறார் சமந்தா. இவருக்கு ஆதரவாக நிற்கிறார் காவல்துறை ஆதி.

கதையில் ஏற்படும் யூ டர்ன் :

Advertisment
Advertisements

இறந்த தாயின் ஆவி, பேயாக வந்து சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரை கொல்ல தொடங்குகிறது. அந்த பேய் நிகழ்த்தும் கொலைகளில் இறுதி வரை உண்மையான குற்றவாளி கண்டறியப்படவில்லை.

அத்தகைய நிலையில் தான் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. தங்கள் மரணத்திற்கு யார் தான் காராணம் என்று தேடி அலைந்த தாய் ஆவிக்கு உண்மை தெரிய வருகிறது. படத்தை பார்த்த பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது அந்த நபரின் அடையாளம்.

இறுதியில் மரணமடைந்த தாய் ஆவி அந்த நபரை என்ன செய்கிறது என்பது தான் கதை. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விருவிருப்பாக கடக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை சோர்வடையவிடாமல் வைத்திருக்கிறது யூ டர்ன்.

Samantha Ruth Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: