தன வாழ்க்கயைில் தேவையில்லாமல் யாருக்கு செலவு செய்தேன் என்பது குறித்து நடிகை சமந்தா கூறியுள்ள பதில், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை தான் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருவதால், இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சமந்தா, தொடர்ந்து விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்த பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
4 ஆண்டுகள் கடந்த நிலையில், சமந்தா – நாக சைதன்யா இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்து பிரிந்தனர். தற்போது சமந்தா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வரும் நிலையில், இந்தியில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த தொடர் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
Advertisment
Advertisements
அதேபோல் சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிந்துவிட்டாலும், ரசிகர்களுக்கு இந்த ஜோடி எப்போதும் ஸ்பெஷல் தான். இதனிடையே தற்போது சமந்த ஒரு நேர்காணலில் தான் யாருக்கான அதிக செலவு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த பதிலை வைத்து சமந்தா நாக சைதன்யாவை தான் சொல்கிறார் என்று கூறி வருகின்றனர். சமந்தாவிடம், நீங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் செலவு செய்தது என்ன என்று கேட்டபோது, ஒன்றாக இருந்த காலத்தில் எனது "எக்ஸ்க்கு" கொடுத்த பரிசுகளுக்காக அதிகப்படியான தொகையை செலவழித்ததாகவும் அதற்காக இப்போது வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சமந்தாவின் இந்த பதில் தற்போது இணையத்தை கலக்கியுள்ளது.
அது என்ன செலவு என்று தொகுப்பாளர் கேட்டபோது, சிரித்துக்கொண்டே சமந்தா அந்த கேள்வியை கேட்காதது போல் வேறொரு டாபிக்கை எடுத்து பேச தொடங்கியுள்ளார். இதன் மூலம் சமந்தா நாக சைதன்யாவை தான் இப்படி கூறியுள்ளார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“