/indian-express-tamil/media/media_files/2025/09/11/samanthas-2025-09-11-22-43-17.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா தனது நடிப்பு, அன்றாடப் பழக்கவழக்கங்கள் அல்லது புதிய காதலர் பற்றிய வதந்திகள் என ஏதோ ஒரு வகையில் நாடு முழுவதும் அவ்வப்போது செய்திகளில் இடம் பிடித்து வருவது தொடர்ந்து வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அந்த வகையில், சமீபத்தில் நடிகை தனக்கு மையோசிடிஸ் என்ற நோய் கண்டறியப்பட்டதாகப் பேசினார். தனது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு நோயுடன் போராடி வந்தாலும், முன்பை விட தான் வலிமையாக இருப்பதாகவும், இப்போது வாழ்க்கை மற்றும் வேலை பற்றிய புதிய கண்ணோட்டத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே ஏ.ஐ.எம்.ஏ.வின் தலைமைத்துவ மாநாட்டில், பேசிய சமந்தா தனது பழைய வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது பற்றிக் கூறினார். என்னுடைய பழைய வாழ்க்கையில் ஒரு வருடத்தில் 5 திரைப்படங்கள் வெளிவரும். ஏனென்றால் அது ஒரு வெற்றிகரமான நடிகருக்கான அடையாளம். 5 படங்கள், ஒரு பெரிய வெற்றிப்படம், முதல் 10 நடிகர்கள் பட்டியலில் இருப்பது, பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பது இதெல்லாம் தேவைப்பட்டது.
அதே சமயம் தற்போது கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. எந்த ஒரு பட்டியலிலும் நான் இல்லை. ரூ.1000 கோடி வசூல் செய்த திரைப்படம் என்னிடம் இல்லை. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக எங்களின் வாழ்க்கைக் காலம் குறைவானது என்று நான் நினைக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து, புகழ் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை சிறிது நேரத்திற்கு, தான் என்று நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை.
நீங்கள் ஒரு நட்சத்திரமாக இருக்கும்போது உங்களுக்கு நிறைய விதியும் அருளும் கிடைக்கிறது. அது முற்றிலும் உங்களுடைய முயற்சி மட்டும் இல்லை. ஒரு நடிகையாக எனது வாழ்க்கைக் காலத்தைவிட ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு மிகவும் முக்கியமானது. நான் மிகவும் நொறுங்கும் மனநிலை கொண்டவளாக இருந்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு கவலையை ஏற்படுத்தும். ஏனென்றால் நாளை யாராவது என் இடத்தைப் பிடித்துவிடுவார்கள், எனக்குப் பதிலாக வேறு ஒருவர் வந்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கும்.
எனது முழு தன்னம்பிக்கையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வெளியாகும் திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியைப் பொறுத்தது தான்," என்று அவர் கூறியுள்ளார். சமந்தா கடைசியாக சிட்டாடல்: ஹனி பன்னி என்ற ஆக்ஷன் த்ரில்லர் தொடரில் வருண் தவானுடன் இணைந்து நடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.