ஆடைக்காக தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சமந்தா கொடுத்த பதிலடி!

சிவப்பு நிற ஆடையில் இருக்கும் நடிகை சமந்தா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அது குறித்து சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

தென் திரையுலகில் பிரபலமாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கும், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாக சைத்தன்யாவுக்கும் சமீபத்தில் திருமணமானது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஷூட்டிங், படம் ரிலீஸ் என பல வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர்.

நடிகை சமந்தா பதிலடி :

நீண்ட இடைவேளைக்கு பிறகு, சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் இணைந்து வெகேஷன் சென்றனர். கணவருடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட சமந்தா, சிவப்பு நிற ஆடை ஒன்று அணிந்து, புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

 

View this post on Instagram

 

Inner peace ????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரையும், அவர் அணிந்திருந்த ஆடை குறித்தும் வன்மையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனங்களை பார்த்த சமந்தா கோவத்தில் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அந்த பதிவில், “திருமணத்திற்கு பிறகு நான் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுபவர்களுக்கு என் எதிர்ப்பு” என்று புகைப்படம் ஒன்றுடன் பதிவிட்டிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close