/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-22.jpg)
நடிகை சமந்தா
நடிகை சமந்தா நண்பர்கள் தினத்தன்று திருப்பதி கோவிலுக்கு சென்று தனது நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
தமிழ் பெண்ணாக பிறந்து ஆந்திராவிற்கு மருமகளாக சென்றுள்ள நடிகை சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடித்து வரும் சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகை சமந்தா வேண்டுதல்:
சென்ற வருடம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்ட சமந்த, குடும்பம், படங்கள் என இரண்டையும் சரியாக கவனித்து வருகிறார். பல நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த வாழ்க்கையிலும் அக்கறை காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சமந்தாவிற்கும் இடம்முண்டு. சமீபத்தில் சமந்தா அளித்த பல பேட்டிகளில் தனது குடும்ப வாழ்க்கை பற்றி அதிகம் பேசி இருந்தார்.
Bringing in friendship day and my ⭐️ birthday with a wonderful darshan in Tirupati and the bestest road trip ever with my friends ❤️!
Happy Friendship Day to all of you ????! pic.twitter.com/DR44YteBp6— Ramya Subramanian (@ramyavj) 5 August 2018
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினந்தன்று நடிகை சமந்தா தனது உற்ற நண்பர்களான விஜய் டிவி ரம்யா மற்றும் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து திருப்பத்தி கோயிலுக்கு படையெடுத்துள்ளார்.
A very memorable Tirupati darshan .
Covered 3500 steps in less than 2.5 hours with my super fit fellow companion @Samanthaprabhu2 !
Feeling refreshed and rejuvenated .
To new beginnings ????????????????❤️????! pic.twitter.com/QoA4It9EcU— Ramya Subramanian (@ramyavj) 5 August 2018
கீழே இருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் சமந்தா. 2.5 மணி நேரத்தில் நடந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்ற சமந்தா வேண்டுதலை நிறைவேற்றிய தகவலை ரம்யா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.