Advertisment

சமந்தா நட்பு வட்டத்தில் லியோ பட தயாரிப்பாளர்: தமிழக கோவில்களுக்கு சுற்றும் போட்டோஸ் வைரல்

லியோ படத் தயாரிப்பாளரின் நட்பு வட்டத்தில் சமந்தா; தமிழக கோவில்களுக்கு பயணம் செய்யும் புகைப்படங்கள் வைரல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samantha temple trip

லியோ படத் தயாரிப்பாளரின் நட்பு வட்டத்தில் சமந்தா; தமிழக கோவில்களுக்கு பயணம் செய்யும் புகைப்படங்கள் வைரல்

’லியோ’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெகதீசுடன் நடிகை சமந்தா கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் சிறப்பாக நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்த வெப் சீரிஸ்களும் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தநிலையில், மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா நடிப்புக்கு தற்காலிகமாக பிரேக் விட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜய் பாட்டுக்கு வைப் ஆன சமந்தா… பழைய பாட்டுதான் : ஆனாலும் சிறப்பு

publive-image

இந்தநிலையில், தயாரிப்பாளர் ஒருவருடன் நடிகை சமந்தா தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பயணம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

publive-image

விஜய் நடித்த ‘லியோ’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ். இந்த நிலையில் சமந்தா மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரும் சாலை வழியாக வேலூர் தங்க கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

publive-image

ஜெகதீஷ் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் காரில் செல்லும் போது தமிழ் சினிமா பாடல்களை கேட்டு செல்லும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

publive-image

மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் சமந்தா, இந்த நடிப்பு இடைவேளையில், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment