நடிகை சமந்தா சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்றதற்கான காரணம் வெளியானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஜாம்பஜார் மார்க்கெட்டில்:
’செல்பி புள்ள’ என்று இளைஞர்களாக அழைக்கபடுபவர் தான் நடிகை சமந்தா. கோலிவுட்டில் தொடங்கி டோலிவுட் வரை சமந்தாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திரைப்பயணத்தில் உச்சத்தில் இருக்கும் போதே, தனது ஆசை காதலனான தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்துக் கொண்டார்.
கோவாவில் சென்ற வருடன் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைப்பெற்றது. சினிமா ப்ளஸ் குடும்பம் இரண்டிலும் சமந்தா ஸ்மார்ட்டாக செயல்பட்டு வருகிறது. இதை இரண்டையும் தவிர அவர், அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் எதுவென்றால் அது சமந்தா நடத்தும் அறக்கட்டளை.
பிரதியுஷா என்ற பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்து வருகிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ–மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.
இந்நிலையில், நேற்று விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை படத்தின் 100 ஆவது நாள் பட விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார். மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்றார்.
காய்கறி விற்ற சமந்தா
நடிகை சமந்தா காய்கறி விற்கும் தகவல் வெளியானதும் கூட்டம் சூழ ஆரம்பித்தது. சமந்தாவிடம் காய்கறி வாங்க பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டனர். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார்.
சமந்தாவின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.