விருது வென்ற மகிழ்ச்சி: கிளாமர் போட்டோஸை அள்ளி இறைத்த சமந்தா
நடிகை சமந்தாவின் கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து கிரங்கிப் போன ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ள நடிகை சமந்தாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
நடிகை சமந்தாவின் கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து கிரங்கிப் போன ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ள நடிகை சமந்தாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவுகு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது கிளாமர் போட்டோக்களை சமூக ஊடகங்களில் அள்ளி இறைத்துள்ளார்.
Advertisment
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை சமந்தா நடித்த ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அவர் இந்த தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடரில் நடித்தது அவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இந்த படத்தில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியாக நடித்தார். சமந்தா ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
Advertisment
Advertisements
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார். சமந்தா விருதைப் பெறுவதற்காக விருது வழங்கும் விழாவில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார்.
பல்வேறு பிரிவுகளுக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளில் ஐந்தாவது முறையாக ஃபிலிம் ஃபேர் விருது பெறுகிறார். ஃபிலிம் ஃபேர் விருது பெறுவது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா ஃபிலிம் ஃபேர் விருந்து வென்ற மகிழ்ச்சியில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்து வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை அள்ளி இறைத்திருக்கிறார்.
சமந்தாவின் கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து கிரங்கிப் போன ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுள்ள நடிகை சமந்தாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"