Advertisment

ட்ரெண்டில் இடம் பிடித்த சமந்தாவின் 'ரங்கஸ்தலம்'

டீசர் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ட்ரெண்டில் இடம் பிடித்த சமந்தாவின் 'ரங்கஸ்தலம்'

திருமணத்திற்கு பிறகு வெளியாகும் சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' படத்தின் டீசர் மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Advertisment

தெலுங்கு நடிகர் ராம்சரண், நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ரங்கஸ்தலம்'. 1985 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் சுகுமார் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சமந்தா வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சமீபத்தில் 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தா, கிராமத்து உடையில் காட்சியளிக்கு புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியது.

அதனைத்தொடர்ந்து,  ஜனவரி 24-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது. ஆனால் இந்த டீசரில் சமந்தா ஒரு காட்சியில் கூட இடம்பெறவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் சமந்தா தோன்றும் காட்சிகளை மற்றொரு டீசரில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற இயக்குனர் சுகுமார் தற்போது, சமந்தா இடம்பெறும் 'ரங்கஸ்தலம்' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

இதில், ரமா லக்‌ஷ்மி கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமந்தா, சைக்கிள் ஓட்டுவது, குச்சி சுமந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தாவிற்கு, திருமணத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 'ரங்கஸ்தலம்' திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment