Advertisment
Presenting Partner
Desktop GIF

என்னை சந்தையில் விற்க தெரியவில்லை: மனம் திறக்கும் நடிகர் சமீர் காகர்

sameer khakhar Bollywood film and television actor :

author-image
WebDesk
New Update
என்னை சந்தையில் விற்க தெரியவில்லை: மனம் திறக்கும் நடிகர் சமீர் காகர்

Sana Farzeen

Advertisment

மூத்த நடிகர் சமீர் காகர் இந்தி திரையுலகில் மீண்டும்  கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார். 1980களில் டிடி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'நுக்காட்' எனும் தொடரில்  கோப்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்," சோக மனநிலையோடு உரையாட விரும்பவில்லை. அதே நேரத்தில், தற்போதைய வாழ்க்கை நிகழ்வுகளில் பெரிய திருப்தியும் இல்லை.  இருப்பினும், நான் தேடும் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என்று நம்புகிறேன். மீண்டும், கேமராவுக்கு முன்னால் செல்ல ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

90 களில் பிரபல நடிகராக இருந்த சமீர் காகர், 1996ல் அமெரிக்காவில்  சாப்ட்வேர் நிறுவனத்தில் ஜாவா கோடராக பணியாற்றத் தொடங்கினார். 2008-ல் பொருளாதார மந்தநிலை காரணமாக, மீண்டும் இந்தியாவுக்குச் திரும்பி நடிப்புத் தொழில் ஈடுபடத் தொடங்கினார்.

"அமெரிக்காவில் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அமெரிக்காவில், நான் 'நடிகர்' என்ற ஒற்றை அடையாளத்திற்குள் சுருங்க வில்லை. புதிய துறையில் நன்றாக செயல்பட்டேன். வாழ்கையின் பல்வேறு கட்டங்களில் வாழ என்னைப் போல் சிலர் மட்டுமே அதிர்ஷ்டசாலிகள் என்பதை நான் அவ்வப்பொது உணர்வேன். 2008 இல் இந்தியாவுக்குத் திரும்பியதில் இருந்து, கலை பசிக்குத் தீனி போடும் வகையில் எந்த கதாபாத்திரமும் அமையவில்லை. தற்போது, நிலைமைகள் மாறும் என்று நம்புகிறேன், ”என்று சமீர் காகர் புன்னகையுடன் கூறினார்.

மேலும், “நுக்காட் தொடருக்குப் பிறகு, பெரும்பாலான மக்கள் எனக்கு 'கோப்டி' கதாபாத்திரமாக என்னை அடையாளம் கண்டனர். பகுத்தறிவு மனம் கொண்ட எந்தவொரு கலைஞனும் ஒத்த தன்மை கொண்ட கதாப்பாத்திரத்தில்  மீண்டும் மீண்டும் நடிக்க விரும்பமாட்டார். மேலும், இயக்குனர் சோபீத் மிர்சா அந்த கதாபாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் உருவாகினர். கோப்டி மிகவும் வித்தியாசமான, மனிதாபிமானம் கொண்ட ஒரு மனிதன். எல்லோரும் என்னை கோப்டியாகப் பயன்படுத்த விரும்பினாலும், அந்த கதாபாத்திரத்தை அழிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ”

கடந்த சில ஆண்டுகளில், ஹசி தோ ஃபாஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி போன்ற திரைப்படங்களிலும்,    அதாலத், சஞ்சீவானி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

Nukkad actor Sameer Khakhar seeks work, says ‘can’t sell myself’

“வாய்ப்பு தேடுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஒரு நல்ல நடிகனாக மாறமுடியாது. நான் கொஞ்சம் பழைய கட்டமைப்பில் வாழ்பவன். என்னை நானே விற்க முடியாது. என்னை, சந்தைப்படுத்திக்கொள்ள எனக்கு தெரியவில்லை. புரியவுமில்லை. என்னையும், என் வேலையையும் அறிந்தவர்கள் என்னை அணுகுவார்கள் என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

அந்த நபர்களில் ஒருவர் திரைப்படத் தயாரிப்பாளர்

அந்த வகையில், தற்போது வெளிவந்த சுதிர் மிஸ்ராவின் சீரியஸ் மேன் (நெட்ஃபிக்ஸ் திரைப்படம்)  செயல்திறன் மிகுந்த கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சியை தந்தது எனவும் தெரிவித்தார்.

தோல்வியை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்குமும் இல்லை என்று சிரித்த படியே உரையாடலை முடித்துக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment