நடிகை சமீரா ரெட்டி, தனது 2 மாத கைக்குழந்தையுடன் கர்நாடகாவின் மிக உயரமான மலை முகட்டிற்கு சென்றுவந்த நிகழ்வு, விவாதப்பொருளாக மாறியுள்ளது.
நடிகை சமீரா ரெட்டி, நடிகர் சூர்யாவின் நடிப்பிலான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்படவே, மேலும் பல படங்களில் நடித்தார். கோலிவுட்டில், சமீராவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
2013ம் ஆண்டில், அக்சய் வர்தே என்பவரை திருமணம் முடித்த சமீராவுக்கு 2015ம் ஆண்டில் மகன் பிறந்தார். தற்போது மீண்டும் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சாகசப்பிரியரான சமீரா, 2 மாத குழந்தை நைரா உடன் கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான முல்லயநாகிரிக்கு சென்றுள்ளார். அதன் உச்சிக்கு சென்ற சமீரா, அங்கிருந்தபடி எடுத்த வீடியோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
குழந்தையை பெற்று விட்டு மாதக்கணக்கில் ஓய்வெடுக்கும் சிலருக்கு மத்தியில், 2 மாதங்களிலேயே சமீரா இப்படியொரு சாகசத்தை செய்துள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் அவரை சிறந்த தாய், வலிமையான பெண்மணி என்று புகழ, இன்னொரு தரப்பினர் 2 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இப்படியொரு சாகசம் தேவையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.