பைக்கில் 300 கி.மீ. பறந்த ‘கோமாளி’ ஹீரோயின் – லாக்டவுனை நல்லாத்தான்யா என்ஜாய் பண்றாங்க!

Samyuktha Hegde : பெங்களூரில் இருந்து சிக்மங்களூருக்கு 300 கி.மீ வரை சென்ற எனது பயணத்தின் சிறுபகுதிதான் இது என்று கூறியுள்ளார்

Samyuktha Hegde, coronavirus, lockdown, bike journey, comali, video, viral, fans, wishes, social networks, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

கோமாளி பட ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டே, இந்த லாக்டவுன் காலத்தில் 300 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் பறந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு, அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகள் இல்லாதநிலையில், நடிகர், நடிகைகள், சோசியல் மீடியாக்களில், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி பதிவிடும் நடிகைகளில் ஒருவர், சம்யுக்தா ஹெக்டே. இவர் விஜய் இயக்கிய வாட்ச்மேன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்தவர். கன்னடத்தில் கிரிக் பார்ட்டி, காலேஜ் குமார் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கிலும் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படத்திலும் வருண், யோகிபாபு நடித்த பப்பி படத்திலும் நடித்திருந்தார்.
இவர் இப்போது தனது சமூக வலைதள படக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பைக்கில் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ள அவர், 300 கி.மீ பைக்கில் சென்றுள்ளார்

சம்யுக்தா ஹெக்டே, இதுகுறித்து கூறியதாவது, வைரங்கள் பெண்களின் சிறந்த ஃபிரண்ட் என்று யார் சொன்னது? எனக்கு என் பைக்குகள்தான். பெங்களூரில் இருந்து சிக்மங்களூருக்கு 300 கி.மீ வரை சென்ற எனது பயணத்தின் சிறுபகுதிதான் இது என்று கூறியுள்ளார். இதையடுத்து பலர் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samyuktha hegde coronavirus lockdown bike journey comali video

Next Story
’வெளி அழகால் மட்டுமல்ல…’ ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய விவேக்!Vivek with Hansika Motwani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com