Samyuktha Hegde Fitness Video and Photo, Samyuktha Hegde Instagram
கடந்த வருடம் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்திருந்தார். இருப்பினும் ’கோமாளி’ படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.
தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ, போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார். அதோடு இணையத்தை தன் வசம் வைத்துக் கொள்ள அடிக்கடி ஃபோட்டோஷூட் நடத்துவதும் இவரின் வழக்கம்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தரத்தில் தொங்கியபடி குட்டி டான்ஸ் போட்டுக்கொண்டே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றையும் சம்யுக்தா வெளியிட்டுள்ளார். மிகவும் கடினமாக செய்யக்கூடிய ஒர்க் அவுட்டை செம கூலாகவும், அசால்ட்டாகவும் செய்து அனைவரையும் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதோடு ஃபிட்னெஸ் ஃப்ரீக்கான சம்யுக்தா, அது சம்பந்தமான வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை மோட்டிவேட் செய்வது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”