அம்மா… மாடல்… பிஸினஸ் வுமன்… பிக் பாஸ் சம்யுக்தா கார்த்திக் சீக்ரெட்ஸ்!

விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனுடன் இணைந்து அதிக நடனமாடி இருக்கும் சம்யுக்தா, அவரின் நெருங்கிய தோழியும் கூட.

Bigg Boss Tamil 4 Samyuktha Karthik
Bigg Boss Tamil 4 Samyuktha Karthik

Samyuktha Karthik:  இந்த வருடம் பிக் பாஸ் நான்காவது சீசன் ஆரம்பித்து விட்டது. இதில் சினிமா, சின்னத்திரை துறையினர் மட்டுமல்லாமல் பெரிதளவில் வெளியில் தெரியாத மற்ற துறையைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டுள்ளனர். இதில் மாடலிங் துறையைச் சேர்ந்த சம்யுக்தா கார்த்திக் முக்கியமானவர்.

Samyuktha Karthik Bigg Boss
சம்யுக்தா கார்த்திக்

பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ரைசா வில்சன், இரண்டாவது சீசனில் மாடல் மற்றும் நடிகையுமான யாஷிகா ஆனந்த், மூன்றாவது சீசனில் சாக்‌ஷி அகர்வால் வரிசையில் இந்த ஆண்டு மாடலும் சீரியல் நடிகையுமான சம்யுக்தா கலந்துக் கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

I have been obsessed with this version of ‘Shape of you’ since the second I heard it. This quarantine finally gave me time to revisit Bharatnatyam and I’m so happy that I found the cutest partner in @samyukthanairofficial We have had so much fun right from our choreo sessions, random last minute rehearsals to shooting it with multiple constraints. We had such a blast doing this, now you tell us what you think in the COMMENTS ! TAG a buddy who you have danced with during school, just like we did back then ! ❤️ Song Credits : Thank you for creating this blockbuster fusion piece. @vinodsmusic @adityara0, @followingmahesh @indianraga Shot by @pragadeesh97 Post production @frames_by_nithin Costumes @shobs66 Our fav mascot and complete assistance @vidya_vibasarees . . . . . . . #shapeofyou #edsheeran #indianraaga #vjbhavna #danceislife #dancecover #dancephotography #danceparty #dancersofinstagram #danceclass #dancevideo #dance #dancelife #dancechallenge #dancefitness #classicaldance #contemporarydance #bharatanatyam #bharatanatyamdancer

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

கேரளாவைச் சேர்ந்த சம்யுக்தாவுக்கு மாடல் மற்றும் நடிகை என்பதைத் தாண்டி, தொழில் முனைவோர்,  4 வயது குழந்தையின் அம்மா என பல அடையாளங்கள் உண்டு. அதோடு ஒரு இன்டர்நேஷனல் சலூனின் franchise-ஐயும் சென்னையில் நடத்தி வருகிறார்.

Samyuktha Karthik Bigg Boss
புடவையில் க்ளாமராக…

“நான் படிச்சது இன்ஜினியரிங். கார்ப்பரேட்டில் பணியாற்றி இருக்கிறேன். அதே நேரத்தில் மாடலிங் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். அப்போது தான் மிஸ் சென்னை டைட்டில் ஜெயித்தேன். அதனால் மாடலிங், நடனம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு எப்போதுமே இருந்திருக்கிறது.”

Samyuktha Karthik Bigg Boss 3
பிக் பாஸ் சம்யுக்தா

“என் மகனுக்கு 4 வயது ஆகிறது. அவன் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன். மேலும் இரண்டு தொழில்களை நடத்துவதோடு, சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸராகவும் இருக்கிறேன். நான் ஒரு ஃபிட் மாம். என்னை போன்று இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன். பிக் பாஸ் வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை” என பிக் பாஸ் மேடையிலேயே சொன்னார் சம்யுக்தா.

இவர் முதலில் ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியல் மூலமாக நடிப்புக்கும் பிள்ளையார் சுழி போட்டார். அதில் அவர் ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதன் பின் வெள்ளித்திரையில் Olu என்ற மலையாள படம் மூலமாக அறிமுகம் ஆனார்.

 

View this post on Instagram

 

The world needs more love, empathy and kindness today. Be the change you want to see in this world. . . . We could only think of ONE song we wanted to dance to, but how to tweak it to suit our style? So without touching the song or remixing it, we have created and added jathi’s to it. . . If you feel a sense of belonging and pride when you see this , it’s because you are a part of something big. Something special. Be proud of where you come from, it DEFINES you. . . . . Thank you @samyukthanairofficial for sharing my enthusiasm and love for dance❤️ . . Could not have done this without @jetheen_rajasekaran ‘s phenomenal shooting and editing skills! . . Thank you @allanpreetham for bringing my vision to life. . . Hope you like what you see. Jai Hind! . . . . #happyindependenceday #indian #tamizhatamizha #arrahman #roja #bharatanatyam #fusion #dancecover #dancer #dancersofinstagram #mood #tricolor #bbdances #dancevideos #dancer #dance

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

அதோடு நடனத்திலும் மிகுந்த ஈடுபாடுள்ளவர் சம்யுக்தா. அவரது நடன வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனுடன் இணைந்து அதிக நடனமாடி இருக்கும் சம்யுக்தா, அவரின் நெருங்கிய தோழியும் கூட.

ஃபிட்னெஸ் மீது அதிக அக்கறை கொண்டவர் சம்யுக்தா, எப்போதும் யோகா செய்து தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். அதோடு ஸும்பா பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார். பிக் பாஸில் ஜொலிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samyuktha karthik bigg boss tamil 4 vijay tv miss chennai samyuktha nair

Next Story
காஜல் அகர்வால் திருமணம் அறிவிப்பு: மாப்பிள்ளை யார் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com