scorecardresearch

முத்தக் காட்சியில் பிக் பாஸ் சனம் ஷெட்டி: ட்ரெண்டிங் வீடியோ

அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘எதிர் வினையாற்று’ என்ற படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

Bigg Boss Tamil 4 Sanam Shetty
Sanam Shetty Bigg Boss 4 Tamil

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டுள்ள சனம் ஷெட்டி நடித்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அலெக்ஸ் தயாரித்து நடிக்கும்  ‘எதிர்வினையாற்று’ என்று திரைப்படத்தில் சனம் ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.

நேற்று பிக் பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி தன் பிறந்தநாளை சக போட்டியாளர்கள் உடன் கொண்டாடினார். சனம் ஷெட்டியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக , அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘எதிர் வினையாற்று’ என்ற படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

போட்டோகிராபர் ஒருவர் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றுகிறார் . அதனால், அவன் சந்திக்கும் எதிர்வினைகளை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.  சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஆளும்கட்சி, எதிர்கட்சி நடத்தும் அரசியல், பேக் நியூஸ், காவல்துறை செயல்பாடுகளில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு, பெண்கள் பாதுகாப்பு, வைரல் கலாச்சாரம்  போன்றவைகளை இத்திரைப்படம் விவாதிக்கிறது. லிப்லாக் காட்சி களும் இடம்பெற்றுள்ளன.

படத்தின் டிரைலர் :


சனம் ஷெட்டி பெங்களூரைச் சேர்ந்தவர். ‘அம்புலி’ (பூங்கவனம்) என்ற படத்தின் மூலம் நடிப்பில் அறிமுகமானார். ‘சதுரம் 2’ (டாக்டர் ப்ரீத்தி), ஸ்ரீமந்துடு (மேக்னா) மற்றும் சிங்கம் 123 (சாந்தினி) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டார்.

‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக, சின்னத்திரையில் நுழைந்தார் சனம். எண்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரியில் நுழைவதற்கு முன்னர்,தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்தார் சனம் ஷெட்டி.


சனம் ஒரு பன்மொழி வித்தகர். தென்னிந்திய மொழிகளில் சரளமாக அவரால் பேச முடியும். இது அவரது திரைப்பட வாழ்க்கையை சிறந்த முறையில் வடிவமைக்க உதவியது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sanam shetty bigg boss ethirvinaiyaatru tamil movie official teaser

Best of Express