உன்னாலே நான்… உனக்காகவே நான்… பிக்பாஸ் சாண்டி எமோஷனல் பதிவு

சாண்டி தனது மனைவி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சாண்டி தனது மனைவி சில்வியா குறித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

sandy master, sandy, bigg boss, sandy wife birthday celebration photo, சாண்டி, சாண்டி மாஸ்டர், சாண்டி மனைவி சில்வியா, சாண்டி, பிக் பாஸ், சாண்டி மனைவி பிறந்தநாள் கொண்டாட்டம், சாண்டி, sandy instagram, sandy emotionally comment on his wife, bigg boss sandy, tamil cinema, sandy dance master

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக அறியப்பட்ட சாண்டி மாஸ்டர் திரைப்பட நடன இயக்குனராக மாறினார். தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா போன்ற பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த சூழலில்தான், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி மாஸ்டர் நல்ல எண்டர்டெய்னராக இருந்தார். அந்த நிகழ்சியின் முடிவில் முகேன் ராவ் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார். சாண்டி மாஸ்டர் ரன்னர் அப்பாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்சியின் போது அவருடைய மனைவி சில்வியா, மகள் லாலா இருவரும் சாண்டியைப் பார்ப்பதற்காக பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது சாண்டியுடன் சேர்ந்து அவர்களும் பாப்புலர் ஆனார்கள்.

சாண்டி மாஸ்டர் சினிமாவில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சாண்டியின் மனைவி சில்வியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சாண்டி – சில்வியா இருவரும் தங்களுடைய இரண்டாவது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், சாண்டியின் மனைவி சில்வியாவுக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது மனைவி குறித்து நெகிழ்ச்சியாகவும் பிரியத்துடனும் பதிவிட்டுள்ளார்.

சாண்டி தனது மனைவி சில்வியாவின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டிருபதாவது: “ஹாப்பி பர்த்டே மை டியர் கண்ணம்மா!! எனக்காகவே வாழும் ஒரு உயிர்!
என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர்!
உன்னாலே நான், உனக்காகவே நான்!
அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி!
லவ் யூ ஆல்வேஸ் கண்ணம்மா!” என்று எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடிய சாண்டியின் மனைவி சில்வியாவுக்கும் சாண்டிக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய புகைப்படத்தை 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sandy master celebrates his wife birthday photos goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com