பிரபல நடன இயக்குனர் சாண்டி குழந்தை தோற்றத்தில் நகைச்சுவையாகப் பேசி வெளியிட்டுள்ள நகைச்சுவை வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி நடன நிகழ்சிகளில் நடன இயக்குனராக அறிமுகமான சாண்டி திரைப்படங்களுக்கு நடனம் அமைக்கு நடன இயக்குனராக ஆனார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்திற்கு நடனம் அமைத்து பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாச் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நிகழ்ச்சியின் இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சாண்டி பெரிய அளவில் பிரபலமானார்.
சினிமா வட்டாரத்தில் பலராலும் சாண்டி மாஸ்டர் என்று அன்புடன் அழைக்கப்படும் சாண்டி ரொம்ப ஜாலியான நபர் என்பதால் அவருக்கும் சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால், சாண்டி சமூக ஊட்கங்களில் ரொம்ப ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர்கள் நடிகைகள், சினிமா துறையினர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சாண்டி குழந்தை தோற்றத்தில் நகைச்சுவையாக பிக்பாஸ் போட்டியாளர்களான தன்னுடைய நண்பர்கள் முகேன், கவின், தர்ஷன் ஆகியோர் பெயரைச் சொல்லி போர் அடிக்குதுடா என்று சிறுவர்களின் மொழியில் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில், சாண்டி ஒரு குட்டிச் சிறுவனின் தோற்றத்தில் டேய் முகேனு, கவினு, தர்ரு இங்க வீட்ல் செம போர் அடிக்குதுடா... எங்க அம்மா வெளியிலயே உடமாட்டேன்னுட்டாங்கடா... என்னா பன்றதுனே தெர்லடா... ஆங் நாம ஒன்னு பண்ணலாமா? நீங்க எல்லா உங்க வீட்ல ஒளிஞ்சுக்குங்க... நான் எங்க வீட்ல ஒளிஞ்சுக்கிறேன். நாம மாறி மாறி விளையாடலாமா? லாலா கூட சிரிக்குதுடா... சொல்லுங்கடா... போர் அடிக்குதுடா முகேனு, கவினு, தர்ரு போர் அடிக்குதுடா... எல்லா என்னடா பண்றீங்க?...” என்று சாண்டி நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.
சாண்டி வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிலர் சாண்டியிடம் இந்த வீடியோவை என்ன செயலி மூலம் செய்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இதே போல, சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் குழந்தை தொற்றத்தில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"