Advertisment

Sanga Thamizhan Movie Release : சங்கத் தமிழன் நல்ல பொழுது போக்கு படம்!

Sangathamizhan Review : ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Sethupathi - Sanga Tamizhan firstlook

சங்கத் தமிழன் விமர்சனம்

Sanga thamizhan tamil movie review, rating : சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரமின் ’ஸ்கெட்ச்’ ஆகியப் படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய் சந்தர். இவர் விஜய் சேதுபதியை வைத்து, ‘சங்கத் தமிழன்’ படத்தை இயக்கியிருக்கிறார். ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

முன்னதாக தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் வெளியாகும் என படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்‌ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் கூறியிருந்தார். இந்நிலையில் இறுதியாக நேற்று (15.11.19) இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் படம் வெளியாகவில்லிஅ. இந்நிலையில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு இன்று திரைக்கு வந்திருக்கிறது விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன்.

Live Blog

Sanga Thamizhan Movie Release Updates

நடிகர் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் படம் ரிலீஸ் தொடர்பான செய்திகளையும், விமர்சனங்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    14:56 (IST)16 Nov 2019

    விஜய் சேதுபதி நல்ல நடிகர் தான் ஆனா...

    14:38 (IST)16 Nov 2019

    படம் சூப்பர்

    சங்கத் தமிழன் திரைப்படம் நன்றாக இருப்பதாக, படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    14:07 (IST)16 Nov 2019

    பாஸிட்டிவ் விமர்சனம்

    சங்கத் தமிழன் திரைப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் ரசிகர்களை மகிழ்விப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:52 (IST)16 Nov 2019

    தல தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி

    சங்கத் தமிழன் படத்தைத் தயாரித்திருக்கும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் தங்களது லோகோவில், எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை இடம் பெறச் செய்துள்ளனர். 

    12:05 (IST)16 Nov 2019

    கத்தி, மெர்சலை நினைவுப்படுத்துகிறது

    சங்கத் தமிழன் திரைப்படம் கத்தி, மெர்சல் ஆகிய படங்களை நினைவுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

    11:37 (IST)16 Nov 2019

    போரடிக்கவில்லை

    விஜய் சேதுபதி அடுத்த கட்டமாக மாஸ் ஹீரோவை முயற்சித்திருக்கிறார் என்றும், பள்ளிப்பருவ ட்விஸ்ட் தான் இருப்பினும் அது போரடிக்கவில்லை என்றும் இவர் பதிவிட்டுள்ளார். 

    11:05 (IST)16 Nov 2019

    பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடிக்க வாழ்த்து

    சங்க தமிழன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்க, சோனி மியூஸிக் சவுத் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

    10:45 (IST)16 Nov 2019

    முதல்பாதி சூப்பர்!

    ராஷி கண்ணா வரும் போர்ஷன்கள் சிறப்பாக உள்ளதாக இவர் கூறியுள்ளார். 

    10:04 (IST)16 Nov 2019

    கமர்ஷியல் எண்டெர்டெயினர்

    சங்கத் தமிழன் திரைப்படம் பொது ரசிகர்களுக்கானது என ட்வீட் செய்திருக்கிறார். 

    09:43 (IST)16 Nov 2019

    பக்கா ஃபேமிலி எண்டெர்டெயினர்

    09:32 (IST)16 Nov 2019

    விஜயா புரொடக்‌ஷனின் ட்வீட் 

    சங்கத் தமிழனின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷனின் ட்வீட் 

    09:28 (IST)16 Nov 2019

    இன்று முதல் சங்கத் தமிழன்

    சங்கத் தமிழன் இன்று வெளியாவதை உறுதி செய்த அதன் விநியோக நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்

    Sanga Thamizhan Movie : சங்கத் தமிழன் படத்தினை தயாரித்திருக்கும் விஜயா புரொடக்‌சன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான வீரம் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் விநியோகம் செய்தது. அப்போது தர வேண்டிய சுமார் 4 கோடி ரூபாய் தற்போது வரை வழங்கப்படவில்லை ‌எனக்கூறி, படத்தை நேற்று வெளியிட ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தயாரிப்பு நிறுவனமும், படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் லிப்ரா புரொடக்சன் நிறுவனமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

    இதேபோல், லிப்ரா புரொடக்சன் ரவீந்திரன் 2013-ம் ஆண்டு பெற்ற 15‌ லட்சம் ரூபாயை திருப்பித் தரவில்லை என்றும் இதனால் ரவீந்திரன் வெளியிடும் சங்கத்தமிழன் படத்தை நெல்லை வினியோக பகுதியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று விக்னேஷ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் சங்கத்தமிழன் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வரும் 21-ம் தேதி வரை வெளியிட தடை விதித்திருக்கிறது.

    Vijay Sethupathi Nivetha Pethuraj
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment