/tamil-ie/media/media_files/uploads/2019/10/Sangathamizhan_VijaySethupathi_Teaser_screenshot.jpg)
Sangathamizhan Vijay Sethupathi
Sanga Thamizhan : ’ஸ்கெட்ச்’ படத்தையடுத்துஇயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் வெளியாகும் என படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் கூறியிருந்தார். இந்நிலையில் இறுதியாக இன்று (15.11.19) இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சங்கத் தமிழன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சில விநியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகையை தரவில்லையாம். தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நேற்று இந்த விவகாரம் குறித்து பேச சந்தித்தனர். எப்படியும் தீர்வு கண்டு இன்று படம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் சங்கத் தமிழன் திரைப்படம் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டு திருநெல்வேலியைச் சேர்ந்த விநியோகஸ்தர் அன்பழகன் என்பவரிடம் வாங்கிய 15 லட்சம் பணத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் திருப்பி தரவில்லையாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அன்பழகன் இறந்து விட்டார். இது தொடர்பாக அன்பழகனின் மகன் விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில் விஜய் சேதுபதியின் ‘சங்க தமிழன்’ படத்தை நெல்லையில் மட்டும் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது நெல்லை நீதிமன்றம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.