எஸ். சுபகீர்த்தனா
Sanga Thamizhan : 'சங்கத்தமிழன்’ விஜய் சேதுபதியிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் படமல்ல. ஆனால் றெக்க, கவண், ஜுங்கா, ஓரு நல்லா நாள் பாத்து சொல்றேன், சிந்துபாத் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறந்த படம். ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, செக்க சிவந்த வானம், 96 மற்றும் பல தரமான படங்களில் நடித்து, தனக்கென ஓர் அளவுகோலை நிறுவியுள்ளார் சேதுபதி. ஆனால் ஒவ்வொரு முறையும் அவரிடமிருந்து சீதக்காதி அல்லது சூப்பர் டீலக்ஸ் வகையான படங்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை. விஜய் சேதுபதி ஒரு கொத்து ஆண்களை எப்போதாவது ஒருமுறை அடித்தால் பரவாயில்லை. ஒரே குத்தில் அனைவரையும் காற்றில் பறக்க விடுகிறார்.
இங்கே நான் ஏன் சங்கதமிழனைப் பொருட்படுத்தவில்லை தெரியுமா? விஜய் சந்தரின் எழுத்து ஓரளவு சீரானது. குறைந்த பட்சம், அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு பார்வையாளர்கள் இதைத்தான் பார்க்கப் போகிறார்கள் என்பதை நிறுவுவதில் ஆரம்பத்திலேயே அவர் அக்கறை காட்டுகிறார்.
சங்கத் தமிழனின் முன்னணி பெண் கதாபாத்திரமாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, மற்றும் நிவேதா பெத்துராஜ் மற்ற படங்களில் வருவதைப் போன்று ’லூசு பொண்ணு’ கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமான பெண்கள். அவர்கள் மனதில் பட்டதைப் பேசுவார்கள். உதாரணமாக, கமலினி (ராஷி) முருகனிடம் (விஜய் சேதுபதி) தனது காதலை வெளிப்படுத்துவதில் வெட்கப்படுவதில்லை. தொலைபேசி உரையாடலில், "இந்த உறவு சரியாக வரும் என்று நான் நம்புகிறேன்" என்று அதற்கான காரணத்தை கூறுகிறார். ராஷி கண்ணாவை நான் பரவாயில்லை என்று கூறவில்லை. ஏனென்றால், தமிழைப் புரிந்துகொண்டு பேசும் ஒருவர் இந்தப் படத்திற்கு உண்மையிலேயே தேவைப்பட்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். (நீங்கள் படத்திற்கு ‘சங்கத்தமிழன்’ என்று பெயரிட்டு விட்டு, தமிழ் அல்லாத கதாநாயகியை ஹீரோயினாக போட்டிருக்கிறீர்கள். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. சரி, “வணிக காரணங்கள்” என்று நீங்கள் சொல்லலாம். அது எப்படி, ஏன் என்று எனக்கு மீண்டும் புரியவில்லை)
சங்கத்தமிழன்
கமலினி யார் என்று நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டாம். சூரி அவரிடம் ஒரு கருத்தை பகிரும் போது, முருகன் தலையிட்டு, “டீசண்டா பேசுங்க சார்” என்கிறார். இதுதான் நான் பேசிக் கொண்டிருந்த எழுத்து. இரண்டாவது பாதியில், தேனு (நிவேதா பெத்துராஜ்) ஒரு உள்ளூர் அரசியல்வாதியை தைரியமாக மரக்கன்றுகளை நட சொல்கிறார். நிவேதாவின் கதாபாத்திரம் படம் முழுவதும் பயணம் செய்யவில்லை என்று நான் ஏமாற்றமடைந்தேன். ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லது பிரியா பவானி சங்கர் போன்ற ஒரு தமிழ் பெண்ணை பார்த்திருந்தால், நான் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். அதற்காக ராஷி கண்ணாவை நான் விரும்பவில்லை என்று அர்த்தமல்ல. தமிழ் பேசும் கதாநாயகியால் இந்த கதாபாத்திரத்திற்கு அதிக நியாயம் செய்திருக்க முடியும் என்று நான் உணர்கிறேன்.
சங்கத்தமிழன், நிச்சயமாக, ஒரு கிளிஷே படம். (விஜய் சேதுபதி சூரியை ‘ஹீரோ’ என்று அழைக்கிறார். அடுத்து வெற்றிமாறன் அவரை இயக்குகிறார்). ஆனால் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், இன்று வரையான விஜய் சேதுபதியின் மாஸ் திரைப்படம். நான் கடவுள் ராஜேந்திரன் நித்யானந்தா போன்ற சிறப்புத் தோற்றத்தில் தோன்றி முருகனின் எதிர்காலத்தை கணிக்கிறார். ஒருநாள் அவருக்கு மணிரத்னத்தின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் என்று உறுதியளிக்கிறார். மேலும், ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவுடன் முருகன் நடிப்பார் என்றும் அவர் கூறுகிறார். இதெல்லாம் எரிச்சலூட்டுபவையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.
ஒருமுறை, விஜய் சேதுபதியிடம், ’ஏன் நாங்கள் விரும்பாத படங்களில் நடிக்கிறீர்கள்’ என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. நடு ரோட்டில் செல்வதைப் போன்று, கலையையும் வர்த்தகத்தையும் சமநிலைப்படுத்துவது குறித்து அவர் நீண்ட நேரம் பேசினார். "என்னால் எப்போதுமே எனக்குத் தேவையான ஒரு படத்தில் நடிக்க முடியாது” என்று அவர் நகைச்சுவையாக கூறினார். "சிலது மொக்கையா தான் தெரியும்" என்று அவர் ஒப்புக் கொண்டார். பெரும்பாலும் நல்லெண்ண அடிப்படையில் திரைப்படங்களில் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி ஏன் சங்கத்தமிழனில் நடித்தார் என என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஒருவேளை, அவர் விஜய் சந்தருடன் பணிபுரிவதை விரும்பியிருக்கலாம். ஒருவேளை, அவர் வார்த்தை கொடுத்திருக்கலாம். ஒருவேளை, அவர் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க விரும்பியிருக்கலாம். ஒருவேளை, அவர் சுய சந்தோஷத்தை பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். இந்தப் படம் தீபாவளியில் வெளியிடப்பட்டிருக்கலாம் என விரும்புகிறேன். ஆனால் அதே நேரத்தில், சங்கதமிழனை விட ஒரு சிறந்த படத்திற்கு விஜய் சேதுபதி தகுதியானவர் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த நெருடலும் இல்லை.