Advertisment

பெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான 'சங்கத்தமிழன்' - ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்

Vijay Sethupathi's Sanga Thamizhan Leaked in Tamil Rockers : பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sanga thamizhan movie, vijay sethupathi

சங்கத்தமிழன்

Tamil Rockers Leaked Sanga Thamizhan : விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா நிறுவனம், நவம்பர் 15-ம் தேதி வெளியீடு என அறிவித்தது.

Advertisment

படத்தின் பொருட்செலவு அதிகம், 'வீரம்' வரிச்சலுகை பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்தப் படத்தின் மீது இருப்பதால் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. 2 நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவுமே எட்டப்படாததால், திட்டமிட்டபடி நேற்று (நவம்பர் 15) படம் வெளியாகவில்லை.

தொடர்ந்து நீடித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று (நவ.16) இப்படம் ரிலீஸானது.

பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். இது படக்குழுவையும், தயாரிப்பு நிறுவனத்தையும் மேலும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், நல்ல படங்களை தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் பார்த்து வரவேற்பது என்றும் குறையப் போவதில்லை.

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment