‘வெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன்’ சங்கத்தலைவன் பாடல் வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனி பேச்சு

சங்கத்தமிழன் பாடல் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல படைப்பு. அதை அப்படியே ராவாக படைக்க வேண்டும் என்று இந்தப்படத்தை மணிமாறன்…

By: Updated: February 20, 2020, 09:39:14 PM

மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் வழங்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தை உதயகுமார் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா, ஜி.வி.பிரகாஷ் , பவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பேசியதாவது, ”நான் முதல் நன்றி ஜீவி சாருக்கு தான் சொல்லணும். அடுத்து வெற்றி சாருக்கு பெரிய நன்றி. சிறு வயதில் இருந்தே அவரது படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன் . இந்தப்படத்தைப் பற்றி சொல்வதை விட இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியைச் சொன்னால் சரியாக இருக்கும். உரிமையை விட உயிரா பெரிது? அனைவருக்கும் நன்றி” என்றார்.

நாயகி ரம்யா பேசியதாவது, “சங்கத்தலைவன் எனக்கு முக்கியமான படம். என் ஆக்டிங்கிற்கு நான் பிள்ளயார் சுழி போட்ட படம் இதுதான். வேல்ராஜ் சார் என்னை இயக்குநர் மணிமாறன் சார் கிட்ட அறிமுகப்படுத்தினார் . மணிமாறன் சார் கதை சொன்னார். எனக்கு லீட் ரோல் கொடுத்தாங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. கிராமத்துப் பெண்களுக்கு கலர் இருக்காது என்பார்கள். ஆனால் கருணாஸ் சார் சொன்னார், கிராமத்துப் பெண்கள் உங்களை விடவும் கலராக இருப்பார்கள் என்று . இந்தப்பத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் என அனைவரும் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். இவர்களோடு இணைந்ததை நான் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்றார்.

நடிகர் கருணாஸ் பேசியதாவது,  “நான்கு வருடம் ஆகுது. சினிமா நிகழ்வில் பேசி. நேற்று இரவு இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுபாதபங்கள். வெற்றிமாறன், மணிமாறன் இருவரும் அந்தக் காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கதை டிஸ்கசன் போது இருவரும் அடித்துக் கொள்வார்கள். அந்தளவிற்கு ஆக்கப்பூர்வமான கதை விவாதம் செய்வார்கள். நான் பார்க்கும் உண்மையான மிகச்சில மனிதர்களில் வெற்றிமாறன் ஒருவன். சட்டமன்றத்தில் நிறையபேர் நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விட நல்லா நடிக்கிறார்கள். அதனால் நாம் சினிமாவிற்கே வந்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். நான் வெற்றிமாறனிடம் நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் மறுத்தார். பின் இந்தக்கதைக்கு நீங்க சரியா இருக்க மாட்டீங்க என்றார். பிறகு ஒரு கேரக்டரை உருவாக்கி இருக்கிறார்கள். சமுத்திரக்கனி நடிக்க சம்மதிக்காவிட்டால் இந்தப்படம் உருவாகி இருக்காது.

இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் இருக்கு. இருந்தாலும் ரொம்ப நாளைக்கு பிறகு படம் நடிப்பதால் இன்று வந்தேன். நிகழ்ச்சித் தொகுப்பாளினி ரம்யா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அறம் படத்தில் நடித்த நடிகை மிகச்சிறந்த நடிகை. மணிமாறன் சொன்னதை சொன்ன நேரத்தில் சரியாக எடுத்துள்ளார். என்னைப் பாடகனாக அடையாளப்படுத்தியவன் உதயா. இந்தப்படத்தின் வியாபாரத்தை வெற்றமாறன் ஆல்ரெடி முடித்துள்ளார். நாளைக்கு எனது பிறந்தநாள். நான் 50 வயதுவரை வாழ்ந்ததே பெருசுதான். என் நண்பர்கள் வெற்றிமாறன், மணிமாறன், உதயகுமார் ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்குப் பிறந்தநாள் பரிசு இந்த சங்கத்தலைவன் படம் தான்” என்றார்.

சமுத்திரக்கனி பேசியதாவது, “இறைவனுக்கு நன்றி. வெற்றிமாறனுக்கு நன்றி. விசாரணை படம் பண்ணும் போது திடீர்னு போன் பண்ணி கூப்பிட்டார். இதைப் பண்ணுங்க என்றார். அதேபோல் தான் இந்தப்படமும். வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல படைப்பு. அதை அப்படியே ராவாக படைக்க வேண்டும் என்று இந்தப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். கருணாஸ் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் கதாபாத்திரம் வேறமாதிரி இருக்கும். தயாரிப்பாளர் உதய் சாரை இன்று தான் பார்க்கிறேன். அவருக்கு நன்றி. இசை அமைபாளர் ராபர்ட் பெரிதாக ஜெயிக்க வேண்டும். கைத்தறி சத்தத்தோடு தான் நான் வளர்ந்தேன். அது சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி.” என்றார்.

இயக்குநர் மணிமாறன் பேசியதாவது, “வெற்றிமாறன் சாரிடம் பாரதிராஜா சார் ஒரு புக் கொடுத்தார். வெற்றிமாறன் படித்துட்டு என்கிட்ட கொடுத்தார். நானும் படித்தேன். அந்த நேரத்தில் கருணாஸ் படம் நடிப்பதைப் பற்றிப் பேசினார். நான் இந்த நாவலை கருணாஸிடம் சொன்னேன். பின் சமுத்திரக்கனி சாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அப்படித்தான் படம் ஸ்டார்ட் ஆச்சு. இந்தப்படத்தில் எனக்கு நல்ல டீம் வாய்த்தது. கருணாஸ் வைத்து படம் எடுத்தால் ரிஸ்க் என்றார்கள். சுப்பிரமணிய சிவா சார் போராட்டம் சினிமாவில் தான் ஜெயிக்கும் என்றார். அது போலியான போராட்டம். ஆனால் நிஜமான போராட்டம் தோற்காது” என்றார்.

வெற்றிமாறன் பேசியதாவது, “இந்தப்படம் நண்பர்களின் கூட்டணி. நானும் மணிமாறனும் ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே பிரண்ட்ஸ். கருணாஸும் உதய்யும் சிறு வயதில் இருந்தே பிரண்ட்ஸ். செல்வம் மகன் ராபர்ட்டை லயோலாவில் அவரைச் சேர்த்துவிட்டோம். ராபர்ட்டை ரெண்டு ட்யூனைப் போடச் சொன்னேன். பிடித்திருந்தது. அதனால், இவரை இசை அமைக்கச் சம்மதித்தேன். வெறும் நட்பால் மட்டுமே ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. இப்போ ஒரு படத்தை பொஸிசன் பண்றதே கஷ்டமா இருக்கு. அந்த வகையில் பொறுமையாக இருந்த உதயாவிற்கு நன்றி சொல்லிக்கிறேன். இப்படி ஒருகதையில் சமுத்திரக்கனி நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று அவரை அப்ரோச் பண்ணோம். சீனிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது . பாரதிநாதன் நாவல் தான் இப்படம். அவருக்கும் நன்றி. எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் இந்தப்படம் நன்றாக வந்ததிற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.


எழுத்தாளர் பாரதிநாதன் பேசியதாவது, “விசைத்தறி தொழிலார்களை பற்றி இதுவரைக்கும் இலக்கியத்தில் ஒரு சிறு குறிப்பு கூட கிடையாது. விசைத்தறி தொழிலார்களின் பின்னணியில் உள்ள வாழ்க்கை , சூழல் எல்லாவற்றையும் புத்தமாக தறியுடன் நாவல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன் . அந்த சூழ்நிலையில் வாழ்ந்தவன் நான். விசைத்தறி தொழிலுக்காக போராட்டங்கள் செய்தேன், வழக்குகளை சந்தித்தேன், சிறைக்கு சென்றேன் . இது போன்ற விஷயங்களை படமாக எடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் . இயக்குனருக்கு நன்றி. நம்பிக்கையோடு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கும் நன்றி.” இவ்வாறு பேசினார் .

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sangathalaivan trailer rlease samuthirakani vetrimaaran karunas

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X