பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இருவரின் சமூக வலைதள பக்கங்களும் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் சானியா மிர்சா. ஹைதராபாத்தை சேர்ந்த இவர், இந்தியாவுக்காக பல போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். இதனிடையே கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக சானியா மிர்சா சோயிப் மாலிக் இடையே கருத்து வெறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மேலும் சானியா துபாயின் பாம் ஜுமைராவில் உள்ள சோயிப் மாலிக்கின் வீட்டிலிருந்து வெளியேறி துபாயில் உள்ள தனது புது குடியிருப்புக்கு மாறிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த தகவல் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சோயிப் சானியா இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கமும் பெருமத் கவனம் ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட 2 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தடகள வீரர் | சூப்பர் வுமன்க்கு கணவர் | ஒரு உண்மையான ஆசீர்வாதத்திற்கு பிறந்த குழந்தைக்கு தந்தை என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே சானியா மாலிக் ஜோடி தி மிர்சா மாலிக் ஷோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.”மியூசிக்கல் செலிபிரிட்டி டாக் ஷோவான இதில், நடிகர்கள் ஹுமாயூன் சயீத், ஃபஹத் முஸ்தபா, அட்னான் சித்திக் மற்றும் தொகுப்பாளர் வசீம் பதாமி ஆகியோர் சிறப்பு விழுந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்த டீசர் தற்போது வைரலாகி வரும் நிலையில், சானியாவின் இன்ஸ்டாகிராமில் இந்த டீசர் பகிரப்படவில்லை. இது குறித்து சானியாவின் ஃபாலோயர் ஒருவர், சானியாவின் பதிவு ஒன்றில், “சானியாவும் மாலிக்கும் விவாகரத்து செய்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், நிகழ்ச்சியின் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டதனால் தற்போது ஒன்றாக ஒன்றாக இருக்கிறார்கள், சானிய பல படங்களை வெளியிடுகிறார். ஆனால் மாலிக்குடன் ஒரு படம் கூட இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பேட்டி ஒன்றில், சோயிப், விவாகரத்து இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார். விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு தானும் சானியாவும் பதில் அளிக்க மாட்டோம் என்றும், பத்திரிக்கையாளர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/