பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ஒரு அறிக்கையை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், "சில மருத்துவ சிகிச்சைக்காக" தான் வேலையில் இருந்து "ஒரு குறுகிய இடைவெளி எடுப்பதாக" ரசிகர்களுக்கு தெரிவித்தார். 61 வயதான சஞ்சய் இந்த அறிக்கையை வெளியிட்டதிலிருந்து, அவர் உடல்நிலை குறித்து பலரும் யூகித்து வருகின்றனர். இந்நிலையில், சஞ்சயின் மனைவி மானாயத தத் ஒரு அறிக்கையைப் பகிர்ந்து கொண்டார். அதில் நல்வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதோடு ’யூகங்களுக்கும் தேவையற்ற வதந்திகளுக்கும் இரையாக வேண்டாம்’ என்று மானாயதா ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
என்றும் இளமையாக கவிதா: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அற்புத தருணம்!
???????? pic.twitter.com/tinDb6BxcL
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
“சஞ்சுவின் விரைவான மீட்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த கட்டத்தை கடக்க எங்களுக்கு எல்லா பலமும் பிரார்த்தனையும் தேவை. கடந்த ஆண்டுகளில் எங்கள் குடும்பம் நிறைய விஷயங்களை கடந்து வந்திருக்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், சஞ்சுவின் ரசிகர்கள் யூகங்கள் மற்றும் தேவையற்ற வதந்திகளுக்கு இரையாகிவிடக்கூடாது என்பதே எனது மனமார்ந்த வேண்டுகோள். ஆனால் அவர்களின் தற்போதைய அன்பு, அரவணைப்பு மற்றும் ஆதரவுக்கு எங்களுக்கு தேவை. சஞ்சு எப்போதுமே ஒரு போராளி, எங்கள் குடும்பமும் அப்படித்தான். எதிர்வரும் சவால்களை சமாளிக்க, கடவுள் நம்மை சோதிக்க மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார். நாங்கள் தேடுவது உங்கள் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் மட்டுமே. நாங்கள் எப்போதும் இருப்பதைப் போல, மறுபுறத்தில் வெற்றியாளர்களாக வெளிப்படுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். ஒளி மற்றும் நேர்மறை பரவ இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம். ” என சஞ்சய் தத்தின் மனைவி, மானாயதா தத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
You are, have and always will be a fighter @duttsanjay. I know the pain it causes but I also know you are strong and will see this tough phase through. My prayers and best wishes for your speedy recovery.
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 11, 2020
’கோவம் மட்டும் வந்துரும்… பச்ச மொளகா’: கதிர் முல்லை செல்ல சீண்டல்
இதற்கிடையே சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டுமென கிரிக்கெட் வீரர், யுவராஜ் சிங் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "நீங்கள் இருக்கிறீர்கள், எப்போதும் ஒரு போராளியாக இருப்பீர்கள் சஞ்சய். அது ஏற்படுத்தும் வலியை நான் அறிவேன், ஆனால் நீங்கள் வலிமையானவர் என்பதையும் நான் அறிவேன். மேலும் இந்த கடினமான கட்டத்தை நீங்கள் தாண்டுவதையும் காண்பேன். நீங்கள் விரைவாக குணமடைய எனது பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.
உடல்நிலை சரியில்லாமல் கடந்த வாரம் மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சஞ்சய் தத். கோவிட் -19 க்கான சோதனை எதிர்மறையாக வந்த நிலையில், திங்களன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சஞ்சய் தத் இதுவரை தனது உடல்நிலை குறித்து எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.