Advertisment
Presenting Partner
Desktop GIF

2-வது குழந்தைக்கு ஆல்யா மானசா ரெடி: சஞ்சீவ் ஹாப்பி அண்ணாச்சி..!

Sanjeev Shares Alya manasa pregnant again: ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம்; சந்தோஷ செய்தி சொன்ன சஞ்சீவ்; ரசிகர்கள் வாழ்த்து

author-image
WebDesk
New Update
2-வது குழந்தைக்கு ஆல்யா மானசா ரெடி: சஞ்சீவ் ஹாப்பி அண்ணாச்சி..!

ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா - சஞ்சீவ் ஜோடி ரசிகர்களிடம் சந்தோஷமான செய்தியை பகிர்ந்துள்ளனர்.

Advertisment

ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவருடைய கணவர் சஞ்சீவ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்படி இருக்கும் ஜோடியை விவாகரத்துச் செய்யப் போறாங்க என்று வதந்தியை கிளப்பி விட்டீர்களே என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி. அந்த சீரியலில் காதலர்களாக நடித்து நிஜ காதலர்களாக மாறி, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார்.

சீரியல் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவர்கள் திருமணம் முடிந்தாலும் என்றும் காதலர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை பற்றி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பல வதந்திகள் கிளம்பி வரும். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும், முன்னேற்றத்திலும் கவனமாக இருந்து வருகின்றனர்.

ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஆல்யா மானசா. அதுவும் இளைஞர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் ஆனார். அதேநேரம் சஞ்சீவ் பெண் ரசிகர்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு முன் இவர்கள் சீரியலில் நடிக்கும்போதே இந்த ஜோடிக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். இப்போது திருமணத்திற்கு பின்னும் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாகவும், ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகைகள் பலர் திருமணம் முடிந்திருந்தாலும் நடிப்பிற்காகவும், வாய்ப்புகளுக்காகவும், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகின்றனர். ஆனால் ஆலியா மானசா திருமணமான உடனேயே முதல் குழந்தையும் பெற்றெடுத்து விட்டார். அப்போது அவர் பாப்புலரான இடத்தில் இருந்தாலும் தனக்கு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .தற்போது அந்த குழந்தை இரண்டு வயதான நிலையில் இவர் மீண்டும் அம்மாவாக போகிறார் என்ற செய்தியை சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் லைவ்வில், சஸ்பென்ஸாக சந்தோஷ செய்தியை சொல்லி இருக்கிறார். இவர் இந்த தகவலைச் சொன்னதும் இவர்களுடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Alya Manasa Raja Rani 2 Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment