Advertisment

‘கிக்’ படத்தின் 500 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கிய சந்தானம்; ரசிகர்கள் பீர், பால் அபிஷேகம்

கிக் திரைப்படம் வெற்றி பெற புதுச்சேரியில் ரசிகர்கள் சந்தானம் கட் அவுட்டிற்கு பீர் மற்றும் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor santhanam gives 500 free tickets for his Kick movie, santhanam Kick movie, puducherry santhanam fans, ‘கிக்’ படத்தின் 500 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கிய சந்தானம், சந்தானம் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பீர், பால் அபிஷேகம், Santhanam, Kick movie Puduchery fans celebrations

‘கிக்’ படத்தின் 500 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கிய சந்தானம்; ரசிகர்கள் பீர், பால் அபிஷேகம்

புதுச்சேரியில் சந்தானம் நடித்த கிக் திரைப்படம் தனது ரசிகர்களுக்கு 500 டிக்கெட்டுகளை சந்தானம் இலவசமாக வழங்கி தனது ரசிகர்களை படம் பார்க்க வைத்தார்.

Advertisment

கிக் திரைப்படம் வெற்றி பெற புதுச்சேரியில் ரசிகர்கள் சந்தானம் கட் அவுட்டிற்கு பீர் மற்றும் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.

சந்தானம் நடித்த கிக் திரைப்படம் இன்று புதுச்சேரி ராஜா திரையரங்கில் வெளியானது.

இதனை ஒட்டி புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் மாநிலத் தலைவர் அருண் தலைமையில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஒரு வாரமாக அவர்கள் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் என வழங்கி கொண்டாடி வந்தார்கள்.

இந்த நிலையில் இன்று திரைப்படம் ராஜா திரையரங்கில் வெளியானதை ஒட்டி சந்தனம் படத்தின் கட்டவுட்டுக்கு முதலில் பீர் அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம் செய்து பூ தூவி படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கு இன்று சந்தானம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் இலவசமாக ஒரு ஷோ ஒரு காட்சி காட்டப்பட்டது இதனை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டங்களுடன் சென்று சந்தன படத்தை பார்த்து ரசித்தனர்.

மேலும் புதுச்சேரி மாநிலத் தலைவர் மூலமாக 500 டிக்கெட்டுகளை சந்தானம் இலவசமாக வழங்கி தனது ரசிகர்களை படம் பார்க்க செய்தார். என மாநிலத் தலைவர் அருண் தெரிவித்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Santhanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment