Advertisment

'கடன் வாங்க கூடாதுனு படம் பண்ணிருக்கோம்; அதுவும் வாங்குன கடனுக்காக': தன் படத்தையே கலாய்த்த சந்தானம்

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் தான் "இங்க நான் தான் கிங்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது

author-image
WebDesk
New Update
Santhanam speaks about his latest movie Inga Naan Thaan Kingu in press show video goes viral Tamil News

தனது படத்தையே கலாய்க்கும் நகைச்சுவை தன்மையும், பக்குவமும் சந்தானம் ஒருத்தருக்குத்தான் வரும் என்று அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Santhanam | Inga Naan Thaan Kingu | Tamil Cinema News: தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருகிறார். சந்தானம். அவரது நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் தான் "இங்க நான் தான் கிங்கு." ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இணைந்து தயாரித்துள்ளனர். 

டி. இமான் இசையமைத்துள்ள இப்படம் இன்று வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்நிலையில், இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சிறப்பு காட்சி நேற்று வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இந்த காட்சிக்குப் பிறகு பேசிய நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தைப் போலவே, இந்தப் படத்தையும் பார்த்து சிரித்து மகிழ்வீர்கள் என்றார். மேலும் அவர் பேசுகையில், "கடன் வாங்க கூடாது அப்படின்ற ஒரு கதையை படமாக  பண்ணிருக்கோம், அதுவும் வாங்குன கடனுக்காக..." என்று கூறி சிரித்தார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது படத்தையே கலாய்க்கும் நகைச்சுவை தன்மையும், பக்குவமும் சந்தானம் ஒருத்தருக்குத்தான் வரும் என்று அவரை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Santhanam Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment