santhanam Tamil News: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சபாபதி' திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 19-ந்தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கான பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்த நிலையில், பத்திரிக்கையாளர்கள் 'ஜெய்பீம்' பட சர்ச்சை குறித்து சந்தானத்திடம் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த சந்தானம், "யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசலாம், ஆனால் தாழ்த்திப் பேசக் கூடாது. இளைஞர் சமூகத்திற்கு நல்ல சினிமாவைத் தர வேண்டும். 2 மணிநேரம் சாதி, மதம், இனம் என அனைத்தையும் மறந்து தியேட்டரில் உட்கார்ந்து மக்கள் படம் பார்க்கிறார்கள். எனில் அதற்கான படமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
Santhanam about #JaiBhim. pic.twitter.com/eof4bMzubu
— No Name (@bldgcontractor) November 16, 2021
ஏற்கனவே ஜெய்பீம் பட சர்ச்சையால் #WestandWithSuriya என்கிற ஹாஸ்டக் ட்விட்டர் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், சந்தானம் இப்படி பேசியுள்ளது நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவிர, 'சபாபதி' பட போஸ்டர் போராளிகளை இழிவுபடுத்துவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய சந்தானம், "ஒரு காட்சியின் புகைப்படத்தை வைத்து அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது. படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்லட்டும்" என்று கூறியுள்ளார்.
இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மாநில உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது. இதனால், நடிகர் சந்தானத்திற்கு எதிராக தற்போது ஒரு ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் சூர்யா ரசிகர்களுடன் சேர்ந்து நெட்டிசன்களும் சந்தானத்தை வறுத்தெடுத்தும், ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.