சினிமா – சின்னத்திரை: இப்போ 3 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் சந்தோஷி!

‘பாபா’ படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.

By: October 10, 2019, 2:07:07 PM

Serial Artist Santhoshi: சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று மீண்டும் சின்னத்திரைக்கு வந்தவர்களில் நடிகை சந்தோஷியும் ஒருவர்.

Santhoshi serial artist சந்தோஷி

2000-ல் ’பெண்கள்’ என்ற படத்தில் நடித்தாலும், அடுத்தப் படத்தில் ‘பாபா’ படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். குறிப்பாக, ‘உனக்கும் எனக்கும்’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான ‘நுவ்வோஸ்டானந்தே நேனோடந்தனா’ படத்தில் நடித்து, சிறந்த பெண் காமெடி நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார்.

Santhoshi serial artist சந்தோஷி

இருப்பினும் சினிமாவில் எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்காததால், சீரியல்களில் தனது முழு கவனத்தையும் செலுத்திய சந்தோஷி, நிறைய சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வாழ்க்கை, ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புதிரி, வாடகை வீடு, இல்லத்தரசி, மரகத வீணை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, அரசி உள்ளிட்டவைகள் சந்தோஷி நடித்த சீரியல்கள். இறுதியாக சன் தொலைக்காட்சியில் ‘மரகத வீணை’ தொடரில் நாயகியாக நடித்து வந்தார். இதற்கிடையே இரண்டாவது பிரசவத்திற்காக, தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டிருக்கிறார்.

இதற்கிடையே தன்னுடன் நடித்த ஸ்ரீகர் என்பவரை மணந்துக் கொண்ட சந்தோஷிக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார்.

சந்தோஷியின் அம்மா பூர்ணிமா முன்னாள் டிவி நடிகை. ”நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். 13 வயதில் ”வாழ்க்கை” சீரியலில் நடித்தது இன்னமும் என்னை அடையாளப்படுத்துகிறது. எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. ஆனா எனக்கு கிடைப்பது எல்லாம் அழுகை சீரியல்தான் கிடைக்கின்றன. அதோடு அழுது நடிக்கிறவர்களைத் தான் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்” என்று முன்பு ஒரு பேட்டியில் சந்தோஷி குறிப்பிட்டிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Santhoshi serial artist sun tv serial list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X