செல்ஃபி கேட்டு நெருக்கமாக வந்த ரசிகர்: பாராட்டைப் பெறும் சாரா அலிகானின் ரியாக்‌ஷன்!

கடைசியாக வரும் ரசிகர் ஒருவர், நடிகையின் அருகில் நெருக்கமாக செல்கிறார்.

By: Updated: November 28, 2019, 03:57:34 PM

Sara Ali Khan :  விமான நிலையங்களில், பொது இடங்களில் செல்பி என்று ரசிகர்கள் வரும்போது, பாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் ஓட்டம் பிடித்து விடுவார்கள். சில நட்சத்திரங்கள் செல்பி கேட்கும் ரசிகர்களைக் கையாளும் போது அமைதியாக இருக்கிறார்கள். சமீபத்தில், நியூயார்க்கில் இருந்து  மும்பைக்கு திரும்பி வந்த நடிகை சாரா அலிகானுடன், செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.

ஒரு ரசிகரோ மிக நெருக்கமாக சாராவின் அருகில் சென்றார். அதற்கு அவரின் எதிர்வினை பலரின் இதயங்களை வென்று வருகிறது. பாலிவுட்டில் மிகவும் டவுன் டூ எர்த் நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படும் சாரா, தனது ரசிகர்களை எவ்விதத்திலும் ஏமாற்றுவதில்லை. இருப்பினும் சமீபத்தில் நேர்ந்த இந்த செல்ஃபி அனுபவம், சற்று புளிப்பான அனுபவமாக மாறியிருக்கிறது சாராவுக்கு.

 

View this post on Instagram

 

#saraalikhan is back from New York #airportdiaries #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

அதன் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், மகிழ்ச்சியான மனநிலையில் நியூயார்க்கில் இருந்து திரும்பிய சாரா, மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார். வெளியே நடந்து செல்லும் போது, சில ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சாராவின் அருகில் செல்கின்றனர். அவர்களின் செல்ஃபி கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார் சாரா. கடைசியாக வரும் ரசிகர் ஒருவர், நடிகையின் அருகில் நெருக்கமாக செல்கிறார். செய்வதறியாது திகைக்கும் சாராவுக்கு கோபம் வந்து முறைக்கிறார். பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

பிறகு வேறு யாருடனும் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளாமல் விருட்டென வெளியேறுகிறார். அந்த செல்ஃபி ரசிகரிடம் சாரா பொறுமையை கடைபிடித்ததைப் பார்த்து, சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sara ali khan reaction for selfie fan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X