New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/Saranyaup.jpg)
Saranya Ponvannan Daughter Engagement Photos
Saranya Ponvannan Daughter Engagement மூத்த மகள் பிரியதர்ஷினியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் குடும்பத்தார்கள் சூழ மிகவும் ப்ரைவேட்டாக நடந்திருக்கிறது.
Saranya Ponvannan Daughter Engagement Photos
Saranya Ponvannan daughter Engagement Tamil News : தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடியான சரண்யா-பொண்வண்ணன் ஆகியோரின் மகளின் நிச்சயதார்த்தம் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் 'அம்மா' கதாபாத்திரம் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சரண்யா பொன்வண்ணன்தான். கதாநாயகியாகப் பல முன்னணி ஹீரோக்களோடு கைகோர்த்து சரண்யா நடித்திருந்தாலும், மக்கள் மனதில் என்னவோ நிலைத்து நிற்பது பாசமான குறும்புக்கார அம்மாவாகத்தான். இவர், இயக்குநரும் நடிகருமான பொண்வண்ணனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் பிரியதர்ஷினியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் குடும்பத்தார்கள் சூழ மிகவும் ப்ரைவேட்டாக நடந்திருக்கிறது. விரையில் திருமண தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த இளம் தம்பதியர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.