Advertisment

சரண்யா ரீ-என்ட்ரி முதல் ஸ்ரீதேவி வளைகாப்பு வரை; சீரியல் செய்திகள்

விஜய் டிவி சீரியலில் மீண்டும் களமிறங்கும் சரண்யா; ஸ்ரீதேவி வளைகாப்பு விழாவில் குவிந்த பிரபலங்கள்; சீரியல் செய்திகள்

author-image
WebDesk
New Update
Saranya Turadi 2

விஜய் டிவி சீரியலில் மீண்டும் களமிறங்கும் சரண்யா; ஸ்ரீதேவி வளைகாப்பு விழாவில் குவிந்த பிரபலங்கள்; சீரியல் செய்திகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவியில் எண்ட்ரியாகிறார் நடிகை சரண்யா.

Advertisment

செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறியவர் சரண்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான `ஆயுத எழுத்து' தொடருக்குப் பிறகு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி `டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2'. இதில் போட்டியாளர்களுள் ஆடி வருகிறார். 

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வில் சரண்யா என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்தத் தொடரில் பல நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சரண்யாவின் என்ட்ரியும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் கதிருக்கு ஜோடியாக சரண்யா நடிக்கிறார். 

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு வளைகாப்பு நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. ஸ்ரீதேவி அசோக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' தொடரிலும், `பொன்னி' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு சித்தாரா என்கிற மகள் இருக்கிறார்.

தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு வளைகாப்பு நிகழ்வு நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை நேஹாவும், ஸ்ருதி சண்முகப்பிரியாவும் ஆரம்பம் முதலே பங்கெடுத்து தன் தோழியின் நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர். மேலும், 'பொன்னி', 'விக்ரம் வேதா' டீம், `தென்றல்' ஸ்ருதி ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial Actress Saranya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment