இது ’நாட்டாமை’ சமையல்: லாக்டவுனில் நடந்த ஆச்சர்யம்!

பூட்டப்பட்ட நிலையில், பிரியாணி, மட்டன், சிக்கன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை சமைக்க தினமும் நான்கு மணி நேரம் செலவழித்து வருகிறாராம் சரத்குமார்.

Sarath Kumar Lockdown Cooking
சரத் குமார்.

நடிகர் சரத்குமார் பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் தயாரிப்பில், தனசேகரன் இயக்கத்தில் அவரது மனைவி ராதிகாவுடன் கடைசியாக ’வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தார். தற்போது, மோகன்லாலுடன் ஒரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர்,  தனது மகள் வரலக்ஷ்மி மற்றும் மனைவி ராதிகா ஆகியோருடன் ’பிறந்தாள் பராசக்தி’ படத்திலும், ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் ’பாம்பன்’ படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

த்ரிஷாவை கரம் பிடிக்கும் சிம்பு? உண்மையா? வதந்தியா?

நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் சமீபத்தில் தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதோடு ஒரு வலைத் தொடருடன் தான் OTT மேடையில் அறிமுகமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தையும் அறிவித்தார்.

சமீபத்திய உரையாடலில், உடற்பயிற்சி ஆர்வலரும், உடல் கட்டமைப்பாளருமான சரத்குமார், தனது பூட்டுதல் பொழுது போக்குகளைப் பற்றி தெரிவித்தார். அவர் தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சிகளுக்காக செலவிடுகையில், சமையல் செய்வதையும் முயற்சித்து வருவதாகக் கூறினார். எப்போதுமே சமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சரத், அவரது அம்மா சமைப்பதை பக்கத்தில் நின்று தெரிந்துக் கொண்டதையும் நினைவுக் கூர்ந்தார்.

இப்போது, பூட்டப்பட்ட நிலையில், பிரியாணி, மட்டன், சிக்கன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை சமைக்க தினமும் நான்கு மணி நேரம் செலவழித்து வருகிறாராம் சரத்குமார். தான் ஒருவிதமான கலையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், தொழில் மாற்றம் வேண்டும் அல்லது நடிப்பிலிருந்து விலக வேண்டுமானால், ஒரு உணவகத்தை கூட தொடங்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐடி ஊழியர்களுக்கு டிச. 31 வரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுமதி: மத்திய அரசு

தல அஜித் உட்பட சில பிரபலங்கள் நல்ல சமையல்காரர்களாக வலம் வருகின்றனர். சரத்குமாரும் விரைவில் தனது சுவையான உணவுகளால், படக்குழுவினரை ஈர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sarath kumar lockdown cooking tamil cinema

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express