90களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். அதே கால கட்டத்தில் வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர் கே.எஸ் ரவிக்குமார். இவர்கள் இருவரும் பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளனர். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை, நட்புக்காக, சேரன் பாண்டியன் போன்ற படங்களில் சூப்பர் ஹிட் ஆனது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாடல்கள், வசனம் என அனைத்தும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இருவரும், பழைய சுவாரஸ்ய நினைவுகளைப் பற்றிப் பேசினர். கே.எஸ் ரவிக்குமாரின் நண்பர் காதலுக்கு இடையில் வந்த சரத்குமார் பற்றி கே.எஸ் ரவிக்குமார் கலகலப்பாக மேடையில் கூறினார்.
நான் சரத்குமாரை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தேன். இந்த பழைய நினைவை சூட்டிங் பார்க்க வந்த என் நண்பன் தான் நினைவுபடுத்தினார். சரத்குமார் ஒருவருடைய வீட்டில் குடியிருந்தார். நாங்கள் அப்போது பள்ளி படித்துக் கொண்டிருந்தோம். சரத்குமார் குடியிருந்த பெசன்ட் நகர் வீட்டின் ஓனர் பெண்ணை என் நண்பன் ஒருவன் லவ் பண்ணுனான். சரத்குமார் தான் அந்த பெண்ணை தினமும் ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, ஈவினிங் கூட்டிட்டு வருவாரு. முதலில் நாங்கள் இவரை பார்க்கும்போது இவர் ஒரு நாளில் போயிடுவார்னு நினைச்சோம். பிறகு தொடர்ந்து அவர் வந்தார். நாங்கள் இவரை ஃப்ரெண்ட் பிடிக்கணும்னு வணக்கம் அங்கிள் என்று நாங்கள் சொல்லிவிட்டு போவோம் என்று பழைய நினைவுகளை கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்து கொண்டார்.
சரத்குமார் இதுகுறித்து பேசுகையில், நான் டென்னிஸ் விளையாட போவேன், அப்போது வீட்டு ஓனர் பாப்பாவிடம் 5,6 பசங்க பிரச்சனை பண்ணாங்க நீங்கள் ஸ்கூல் பஸ் ஏற்றி விடுங்க என்று கூறுவாங்க என்று சொன்னார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“