15,000 சதுர அடி பங்களா, பூட்டுவதற்கு 7 கதவுகள்; பராமரிக்க முடியாமல் பங்களாவை காலி செய்யும் சரத்குமார் - ராதிகா தம்பதி!

சமீபத்தில் ஒரு நேர்காணலில் அந்த பெரிய சொத்தை பராமரிப்பதில் உள்ள சவால்களைப் பற்றி சரத்குமார் மனம் திறந்து பேசினார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் அந்த பெரிய சொத்தை பராமரிப்பதில் உள்ள சவால்களைப் பற்றி சரத்குமார் மனம் திறந்து பேசினார்.

author-image
WebDesk
New Update
Sarathkumar Radhika

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கேரக்டர் நடிகராக வலம் வரும் சரத்குமார், ராதிகா தம்பதி தாங்கள் வசித்து வரும் ஆடம்பர பங்களாவில் இருந்து வெளியேற உள்ளதாகவுமு், இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

Advertisment

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பின்னாளில் ஹீரோவாக உருவெடுத்து தற்போது முன்னணி கேரக்டர் நடிகராக உள்ளவர் சரத்குமார். இவரது மனைவி ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான் இவர், திரைப்படம் தனது கணவருடன் இணைந்து அரசியல் என பிஸியாக இருந்து வருகிறார், இந்த தம்பதி தற்போது, சென்னையில் உள்ள ஈசிஆர் (ECR) பகுதியில் இருந்த தங்களின் ஆடம்பர பங்களாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர் என்பதை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சினிஉலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அந்த பெரிய சொத்தை பராமரிப்பதில் உள்ள சவால்களைப் பற்றி சரத்குமார் மனம் திறந்து பேசினார். அந்த நேர்காணலில், 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த பெரிய பங்களாவை நிர்வகிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. வீட்டை பாதுகாப்பாக பூட்டுவதற்கு மட்டும் ஏழு கதவுகள் இருந்ததால், ஒவ்வொரு நாளும் அதனை மூடுவது கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய வீட்டை பராமரிக்க எப்போதும் குறைந்தது 15 வேலையாட்கள் தேவைப்படுவார்கள், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, அவரும் ராதிகாவும் தனியாகப் பராமரிக்க முடியாததால், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு சிறிய, பராமரிக்க எளிதாக உள்ள வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

Advertisment
Advertisements

சரத்குமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தனது பங்களாவைப் பற்றி, பிகைண்ட்வுட்ஸ் சேனலின் ஒரு பழைய நேர்காணலில் மனம் திறந்து பேசினார். அவர் அந்த வீட்டை தானே வடிவமைத்ததாகவும், அதற்கு ஒரு தனித்துவமான எண்கோண வடிவத்தைக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். அந்த பங்களாவில் ஒரு மீட்டிங் அறை மற்றும் கூட்டங்களுக்கான பிரத்யேக இடத்தையும் அவர் அமைத்திருந்தார்.

மேலும், அந்த வீட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அவரது மகனால் வடிவமைக்கப்பட்ட சுவரில் உள்ள கொலாஜ் (collage) ஆகும். அதில், எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற பழம்பெரும் தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன், ரோஜர் மூர், ஜாக்கி சான் மற்றும் எரோல் ஃபிளின் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தனர்.

சரத்குமார் 2001 இல் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு மகள்களும், ராதிகாவுடன் ஒரு மகனும் உள்ளனர். சரத்குமார் கடைசியாக, '3பி.எச்.கே' என்ற படத்தில் தேவயானி, சித்தார்த், மற்றும் மீதா ரகுக்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த உணர்ச்சிபூர்வமான திரைப்படம், ஒரு குடும்பம் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

Radhika Sarathkumar R Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: