நடிகர் சரத்குமார் - ராதிகா நடித்த வானம் கொட்டட்டும் படம் குறித்து அவருடைய மகள் ரயானே அப்பா நான் உங்களால் ரொம்ப பெருமைகொள்கிறேன் என்று உணர்ச்சி பூர்வமாக டுவிட் செய்துள்ளார். ரயானேவின் டுவிட் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.
நடிகர் சரத்குமார் - ராதிகா நடித்த வானம் கொட்டட்டும் படம் குறித்து அவருடைய மகள் ரயானே அப்பா நான் உங்களால் ரொம்ப பெருமைகொள்கிறேன் என்று உணர்ச்சி பூர்வமாக டுவிட் செய்துள்ளார். ரயானேவின் டுவிட் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது.
Advertisment
தமிழ் சினிமா உலகில் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சரத்குமார் தற்போது, கௌரவ வேடங்களில் நடித்துவருகிறார். சரத்குமாரும் அவருடைய மனைவி ராதிகாவும் நடித்த வானம் கொட்டட்டும் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
வானம் கொட்டட்டும் படத்தை இயக்குனர் தனா இயக்கியுள்ளார். நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக உள்ள சரத்குமார் - ராதிகா தம்பதியினர் இந்தப் படத்தில் சூர்ய வம்சம் படத்திற்குப் பிறகு, திரையில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
சரத்குமார் நடித்துள்ள வானம் கொட்டட்டும் படம் குறித்து அவருடைய மகள் ரயானே தனது டுவிட்டர் பக்கத்தில், அப்பா நான் உங்களால் ரொம்ப பெருமைகொள்கிறேன் என்று உணர்ச்சி பூர்வமாக டுவிட் செய்துள்ளார். மேலும், அந்த டுவிட்டில், “வெற்றி 10 முறை வீழ்த்துகிறது. வீழ்வது பெரிதல்ல. நீங்கள் பத்து முறை வீழ்ந்தாலும் 11வது முறையாக நீங்கள் எழுந்து வருவதைக் காணலாம். தோல்வி என்பது வீழ்ச்சியைப் பற்றியது அல்ல, அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான். இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த மனிதர் மிகக் குறைந்த அளவில் காணப்பட்டார். ஆனால், அது அவரை வலிமையாக்கியது. இந்த படத்தில் அவரைப் பார்க்கும்போது என்னை ஒருவித உணர்ச்சிவச படச்செய்தது.- நான் அவரைக் கட்டிப்பிடித்து, நான் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்ல விரும்பினேன். நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமை கொள்கிறேன். இது தொடக்கம் மட்டுமே அப்பா. இது மேலும் தொடர்ந்து மேல்நோக்கிச் செல்லும். அனைவரும் திரைப்படத்தைப் பார்க்கச் செல்லுங்கள். இது ஒரு வகையான உணர்வு!” என்று குறிப்பிட்டுள்ளார்.
சரத்குமார் மகள் ரயானேவின் இந்த உணர்ச்சிப் பூர்வமான டுவிட் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.